Breaking News

ப’ வடிவ இருக்கை அறிவிப்புக்கு வித்திட்ட ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ மலையாளப் படம்

1369169

மாணவர்​களுக்கு சரிசம​மான கற்​றலை உறு​தி​செய்​யும் வித​மாக பள்ளி வகுப்​பறை​களில் ‘ப’ வடி​வில் இருக்​கைகள் அமைக்​கப்பட வேண்​டுமென பள்​ளிக்​கல்​வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன் அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: வகுப்​பறை​யில் வசதி​யான இருக்கை ஏற்​பாடு கற்​றலை மேம்​படுத்​து​வ​தி​லும், மாணவர்​களை ஆசிரியர் நன்கு தொடர்பு கொண்டு உரை​யாட​வ​தி​லும் முக்​கியப் பங்​காற்​றுகிறது. இதை கருத்​தில் கொண்டு அமைச்​சர் அன்​பில் மகேஸ் பள்​ளி​களில் ‘ப’ வடிவ இருக்கை வசதியை ஏற்​படுத்த அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

இந்த அமைப்​பில் ஒவ்​வொரு மாணவரும் ஆசிரியர் மற்​றும் கரும்​பல​கையை தெளி​வாகப் பார்க்க முடி​யும். வகுப்​பறை​யில் உள்ள அனைத்து மாணவர்​களை​யும் ஆசிரியர்​கள் எளி​தில் தொடர்பு கொள்ள இயலும். மேலும், மாணவர்​களின் செயல்​பாடு​களை ஆசிரியர்​கள் துல்​லிய​மாக கண்​காணிக்க முடி​யும்.

இதுத​விர கலந்​துரை​யாடல்​கள், கேள்வி பதில் அமர்​வு​கள், கருத்​துகளை பகிர்ந்து கொள்​ளுதல் ஆகிய​வற்​றுக்கு ‘ப’ வடிவ இருக்கை வசதி சமவாய்ப்பை வழங்​கு​கிறது. அதே​போல் தொழில்​நுட்ப செயல்​முறை விளக்​கங்​கள், குழு விவாதங்​களுக்​கும் இந்த முறை மிக​வும் உகந்​த​தாக இருக்​கும். மாற்​றுத்​திறன் மாணவர்​களுக்கு சற்று வசதி​யாக அமை​யும்.

இந்த இருக்கை வசதி​யின்​படி ஒவ்​வொரு மாணவரும் முன்​புற வரிசை​யில் இருப்​பார்​கள். இதன்​மூலம் ஆசிரியர் பாடம் நடத்​தும்​போது வகுப்​பில் உள்ள எவரும் மறைக்​கப்​ப​டா​மல் சிறந்த கற்​றல் நடை​பெறு​வதை உறுதி செய்ய முடி​யும். குறிப்​பாக ஆசிரியரின் நேரடிக் கண்​காணிப்​பில் இருப்​ப​தால் மாணவர்​களுக்கு கற்​றலில் கவனச் சிதறல் ஏற்​ப​டாது.

பொது​வாக பாடப்​பொருள் தொடர்​பாக ஆசி​யர்​களிடம் சந்​தேகங்​கள் எழுப்​ப​வும், கருத்து பரி​மாற்​றம் செய்​வும் சில மாணவர்​கள் தயங்​கு​வது வழக்​கம். இது​போன்ற மாணவர்​கள் இனி எவ்​வித தயக்​க​மும் இல்​லாமல் அச்​சமின்றி கற்​றலில் ஆர்​வத்​துடன் பங்​கேற்க முடி​யும். எனவே, அனைத்து முதன்​மை, மாவட்​டக்​கல்வி அலு​வலர்​களும் தங்​கள் கட்​டுப்​பாட்​டில் உள்ள தலைமை ஆசிரியர்​களுக்கு மாணவர்​களின் எண்​ணிக்கை மற்​றும் வகுப்​பறை​யின் அளவைப் பொருத்து இந்த ‘ப’ வடிவ இருக்கை வசதி​யைச் செய்ய அறி​வுறுத்த வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடையே சமீபத்​தில் கேரளா​வில் வெளி​யான ஸ்தா​னார்த்தி ஸ்ரீகுட்​டன் எனும் படத்​தில் பள்ளி வகுப்​பறை​யில் அரைவட்ட வடி​வில் இருக்​கைகள் போடப்​பட்டு ஆசிரியர்​கள் பாடம் நடத்த வேண்​டும் என்ற கருத்து வலி​யுறுத்​தப்​பட்​டது. பெரும் வரவேற்பை இந்த நடை​முறை கேரளா​வில் சில பள்​ளி​களில் சோதனை முறை​யில் அமல்​படுத்​தப்​பட்​டது. தொடர்ந்து பஞ்​சாப், ஜம்​மு- காஷ்மீர் ஆகிய மாநிலங்​களும் இந்த வகுப்​பறையை அமல்​படுத்த முன்​வந்​தன. அந்த வரிசை​யில் தமிழகத்​தி​லும் பள்​ளி​களில் இந்த நடை​முறையை பின்​பற்ற பள்​ளி​கல்​வித்​ துறை உத்​தர​விட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

No comments