Breaking News

Kamarajar Song in Tamil | காமராஜர் பாடல் வரிகள்

 


 Kamarajar Song in Tamil | காமராஜர் பாடல் வரிகள்

நாட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்டவர்களில் காமராஜரும் ஒருவர். நாளை ஜூலை 15-ம் தேதி காமராஜரின் பிறந்த நாள். இவரது பிறந்த நாளை தான் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுகிறோம். இவர் தனது நாட்டிற்காக செயல்களை சொல்ல வேண்டுமென்றால் சொல்லி கொண்டே போகலாம். இந்த பதிவில் காமராஜரை பற்றிய பாடல் வரிகளை பற்றி காண்போம்.

உன்னை போல் தலைவர் உண்டோ பாடல் வரிகள்:

உன்னை போல் தலைவர் உண்டோ?

உழைப்பாலே உயர்ந்தவரே!!

அன்னை சிவகாமி பெற்ற

ஆசியாவின் திருவிளக்கே!!!

அன்பிலே ஆழ்ந்த நிலை

ஆற்றலிலே இமயமலை!!

ஆதரவும் நிலைபெறவே ஆலமரம் போன்றவரே

எத்தனையோ தலைவர் உண்டு

இருந்தாலும் உமக்கு இணையோ

ஏழைக்கு என பிறந்தவரே

“எங்கள் குல நாயகரே”

நீரின்றி உலகு இல்லை

நீரின்றி நம் குலம் இல்லை

ஏழைக்கு என பிறந்தவரே

உத்தமரே “காமராஜா”

மக்கள் சுகம் வேண்டியால்லோ

மனம் முடிக்க மறந்தவரே

உன் புகழை பார்த்தாலே உனக்கு நிகர்

ஒரு புலவன் இல்லை

எழுத்தாலே வடித்து எடுக்க ஏழைகளும் போதவில்லை

சொத்து சுகம் உமக்கு இல்லை

சொந்த வீடும் உமக்கு இல்லை மக்கள் மனசே வீடு என்று குடி புகுந்த எம் தலைவா…

இன்று நாடார்களின் குலதெய்வமாய் ஆனாய்

எங்கள் ஐயா

வாழ்க நாடார் குலம்!!!!!!!!

வளர்க நாடார் குலம் !!!!

குழந்தை பாட்டு:

அன்பு உள்ளம் கொண்டவர்

அருமை காமராஜராம்

எல்லாரும் படிக்கவே

ஏற்ற வழி செய்தவர்.

பள்ளி செல்லும் பிள்ளைகள்

கால் வலிக்க நடக்காமல்

பக்கத்திலே படித்திட

பள்ளிகளைத் திறந்தவர்.

படிக்கும் நல்ல பிள்ளைக்கு

மதிய உணவு தந்தவர்

ஒரே நிறத்தில் சீருடை

ஒன்றாய் அணியச் சொன்னவர்.

காந்தி வழி நின்றவர்

உத்தமராம் காமராஜர்

நினைவை என்றும் போற்றுவோம்

பிள்ளைகளே வாருங்கள்!

காமராஜர் பாடல் வரிகள்:

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்

இந்த நாடு முன்னேற நாளும் உழைத்தவனை

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

பள்ளி அறியாத பிள்ளை பல பேரின் முகத்தை பார்த்தானம்மா

அது ஊரு சுற்றாமல் சோறு தான் போட்டு படிக்க வைத்தானம்மா

மாடு பிடித்த கையில் ஏடு கொடுத்த மகராஜன் இவன் தானம்மா

இந்த ஊரு உலகெங்கும் தேடிப் பார்த்தலும் ஈடு எவன் தானம்மா

வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தார்

பிள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவரே

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

பதவி இருந்தாலும் பதவி போனாலும் உதவி புரிவானம்மா

தன்னைப் பெற்ற தாயை விட பிறந்த நாடுதான் பெரிது என்பானம்மா

ஆற்று நீரையே அணைகள் கட்டியே தேங்க வைத்தானம்மா

அங்கு தேங்கும் நீரில் மின்சாரம் எடுத்து விளக்கேற்றி வைத்தானம்மா

வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தார்

பிள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவரே

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்

இந்த நாடு முன்னேற நாளும் உழைத்தவனை

நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

No comments