ஆசிரியையை அவதூறாக பேசிய கல்வித்துறை அதிகாரி இடமாற்றம்
சேலம் மாவட்டம் நங்கவல்லியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேச்சேரி சேர்ந்தவர் முதுகலை தமிழ் ஆசிரியை ஆக பணிபுரிந்து வருகிறார்
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட திட்ட அலுவலர் மாரியப்பன் அவர்கள் அப்பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றார்.
அப்போது பிளஸ் 2 வகுப்பில் இருந்த முதுகலை தமிழ் ஆசிரியையிடம் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது அத்துடன் மாணவிகள் முன்னிலையில் பாலியல் ரீதியான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளதாகவும் புகார் எழுந்தது
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியை அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்த மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயிலுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
இதன் பேரில் விசாரணை நடத்தப்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. முதற்கட்டமாக புகாரக்கு உள்ளான மாவட்ட திட்ட அலுவலர் மாரியப்பனை அம்மாபேட்டை பாவடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து இணை இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) கோபிதாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தொடர்ந்து சேலம் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் புதிய திட்ட அலுவலராக மகுடஞ்சாவடி அடுத்த அழகப்பன் பாளையம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முரளி நியமிக்கப்பட்டார்.
இதனை அடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அந்த அவர் புதிய திட்ட அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் மாவட்ட முதன்மை கல்வி திருக்கவிதை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
No comments