8வது ஊதியக்குழு: அடி தூள்!! 3 மடங்கு ஊதிய உயர்வு, ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்
8th Pay Commission Salary Hike: 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். குழு உறுப்ப்பினர்களின் நியமனம், குறிப்பு விதிமுறைகள் ஆகியவற்றில் கூடிய விரைவில் பெரிய அப்டேட் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. ஊழியர்களுக்கு எதிர்பார்க்கப்படும் ஊதிய உயர்வு அனுமானம் பற்றி இந்த பதிவில் காணலாம்.
நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள். இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 8வது ஊதியக் குழுவை அமைக்க மோடி அரசு ஒப்புதல் அளித்திருந்தது. அப்போதிருந்து ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி அதிகரித்துள்ளது.
இப்போது ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமனத்திற்காகவும் குறிப்பு விதிமுறைகள் (TOR) இறுதி செய்யப்படுவதற்காகவும் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இது தொடர்பாக ஒரு பெரிய புதுப்பிப்பு வெளியாகியுள்ளது.
8வது மத்திய ஊதிய ஆணையம் 2027 ஆம் ஆண்டு வாக்கில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதம் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் நியமனமும் குறிப்பு விதிமுறைகளும் இறுதி செய்யப்படும் என்றும், குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க சுமார் 1 1/2 ஆண்டு காலம் ஆகும் என்றும் கூறப்படுகின்றது.
புதிய அடிப்படை ஊதியத்தை அடைய ஏற்கனவே உள்ள அடிப்படை ஊதியம் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்ற காரணியால் பெருக்கப்படுகின்றது. 7வது ஊதியக்குழுவில் 2.57 ஆக இருந்த ஃபிட்மென்ட் ஃபாக்டர் 8வது ஊதியக்குழுவில் 2.86 ஆக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும் என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். தற்போது ₹18,000 அடிப்படைச் சம்பளம் கொண்ட ஊதிய நிலை 1 இல் உள்ள ஊழியர்களின் ஊதியம் ₹51,480 ஆக உயரக்கூடும். நிலை 2 ஊழியர்களின் ஊதியம் ₹19,900 -இலிருந்து ₹56,914 ஆக அதிகரிக்கலாம்.
லெவல் 3 ஊழியர்களின் ஊதியம் ரூ.21,700 -இலிருந்து ரூ.62,062 ஆகவும், லெவல் 6 ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.35,400 -இலிருந்து ரூ.1 லட்சத்திற்கு மேலும் அதிகரிக்கலாம். தொடக்க நிலை IAS மற்றும் IPS அதிகாரிகள் உட்பட லெவல் 10 அதிகாரிகள் ரூ.56,100 முதல் ரூ.1.6 லட்சம் வரையிலான அதிகரிப்பைப் பெறலாம்.
அடிப்படை சம்பளத்தில் DA இணைக்கப்படுமா? 7வது சம்பளக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இப்போது அது ரூ.27000 ஆக உயரலாம். 8வது சம்பளக் குழுவில், அடிப்படை சம்பளத்தை DA உடன் இணைக்க வாய்ப்புள்ளது. இது நடத்தால் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் ஏகப்பட்ட ஏற்றம் ஏற்படும்.
No comments