அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது... அக்.1 முதல் மீண்டும் அமலுக்கு வரும் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை
தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறையை அக்டோபர் 1 முதல் மீண்டும் செயல்படுத்துகிறது.
கொரோனா தொற்று காலத்தில், நிதி சுமை காரணமாக அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதை மீண்டும் செயல்படுத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதத்தில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை அக்டோபர் முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு இருந்த ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தாங்கள் ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை சரண் செய்து, அதற்கான பணப்பலன்களை பெற்றுக் கொள்ளலாம்.
No comments