மாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி.. களஞ்சியம் செயலி நன்மை.. ஆகஸ்ட் மாதம் ரெடியா இருங்க
களஞ்சியம் ஆப் மூலம் ஊதியம் அல்லாத பிற நிதிகளை பெறுவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து நிதியை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. களஞ்சியம் செயலி என்பது என்ன? இதன் செயல்பாடுகள் என்ன? அரசு ஊழியர்களுக்கு இந்த செயலியில் செய்து தரப்பட்டுள்ள வசதிகள், நன்மைகள் என்னென்ன? என்பதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் என 13 லட்சத்துக்கும்
மேற்பட்டோர் உள்ளனர். அரசு பணிகள் திறம்பட நடப்பதற்கும், சம்பளம் பெறும்
அரசு ஊழியர்களுக்கும் IFHRMS என்ற ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள
மேம்பாட்டு திட்டம் என்ற சாப்ட்வேர் பயன்பாட்டில் உள்ளது... இதைத்தவிர,
கல்வித்துறையில் மாணவர்கள், ஆசிரியர், பள்ளிகளின் முழு விவரங்கள் கொண்ட
எமிஸ் என்ற வெப்சைட்டும் பயன்பாட்டில் உள்ளது.
அரசு ஊழியர்கள்
எனினும், அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணிப் பலன்களை பெறுவதை எளிமையாக்கும்
வகையில் 'களஞ்சியம்' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஊழியர்கள்
தங்களது விடுப்பு, சம்பளம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி, இ சலான்,
மருத்துவ காப்பீடு விவரம் போன்ற விஷயங்களை எளிதாக மேற்கொள்ளலாம்.
"களஞ்சியம் மொபைல் ஆப் மூலம் குறிப்பாக பே ஸ்லிப் (Pay Slip), பே ட்ரான்
(Pay Drawn?), பர்டிகுலர்ஸ் (Particulars) போன்ற தரவுகளை பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம். இது தவிர தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு
ஆகியவற்றுக்கு களஞ்சியம் மொபைல் ஆப் மூலம் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.
வைப்பு நிதி முன்பணம்
பண்டிகை காலத்தில் முன்பணம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி முன்பணம்
ஆகியவற்றுக்கும் களஞ்சியம் மொபைல் ஆப் மூலமாகவே விணணப்பித்தும் கொள்ளலாம்..
இவைகள் சம்பந்தப்பட்ட செயல்முறை ஆணைகளையும் உடனடியாக டவுன்லோடு செய்து
கொள்ளலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்
போன்றவற்றிலுள்ள தொகையையும் களஞ்சியம் ஆப் மூலமே சரிபார்த்துக் கொள்ள
முடியும்... வருடாந்தர நேர்காணலை இந்த செயலியின் மூலம் ஓய்வூதியர்கள்
மேற்கொள்ளலாம்.. பே ஸ்லிப் (Pay Slip), பே ட்ரான் (Pay Drawn?),
பர்டிகுலர்ஸ் (Particulars), ஃபார்ம் 1 ஜி (Form 1G) போன்றவற்றையும்
டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
பாஸ்வேர்டு, யூசர்ஸ்
இதற்காகவே, பணியிலுள்ள அலுவலர்கள், ஓய்வூதியர்களுக்கு என தனித்தனியே யூசர்
நேம், பாஸ்வேர்டு வழங்கப்பட்டிருக்கிறது.. இதன் பணிசார்ந்த செயல்பாடுகளை
அரசு ஊழியர்களே மேற்கொள்ளும் வகையிலும், அதற்கான அனுமதி அதிகாரிகள்
வழங்கும் வகையிலும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியர்களும் ஆயுள் சான்றிதழ் அல்லது வாழ்நாள் சான்றிதழை களஞ்சியம்
செயலி மூலம் சமர்ப்பிக்கும் வசதியை நம்முடைய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுடைய ஆயுள் சான்றிதழை
சமர்ப்பித்தால் அதை ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி கருவூலத் துறை ஆணையரிடம்
இருந்து வரும்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக தமிழக அரசு
கொண்டுவந்துள்ள இந்த வசதி, மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்
மூலம் அவர்கள் மிக எளிதாக எந்த சிரமமும் இல்லாமல் தங்களுடைய ஆயுள்
சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். பென்சன் பணம் கிடைப்பதிலும் சிரமம்
இருக்காது.
இப்படிப்பட்ட சூழலில், களஞ்சியம் ஆப் மூலம் ஊதியம் அல்லாத பிற நிதிகளை
பெறுவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து நிதியை பெற்றுக் கொள்ளலாம் என்று
அரசு தெரிவித்துள்ளது.
எப்படி பதிவிறக்குவது
கூகுள் பிளே ஸ்டோரில் களஞ்சியம் மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்ய
வேண்டும். அதற்கு
https://play.google.com/store/apps/details?id=com.ifhrms.kalanjiyam
என்ற இந்த நேரடி லிங்க்கையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
எனவே, களஞ்சியம் ஆப் மூலம் ஊதியம் அல்லாத பிற நிதிகளை பெறுவதற்கு தேவையான
ஆவணங்களை சமர்ப்பித்து நிதியை வரும் ஆகஸ்ட் மாதமும் பெற்றுக் கொள்ளலாம்
என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments