வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு குட் நியூஸ்.. மீண்டும் நீட்டிக்கப்படும் கடைசி தேதி? நோட் பண்ணுங்க
வருமான வரி தாக்கல் சீசன் முழு வீச்சில் இருக்கும் நிலையில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மீண்டும் தள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போது செப்டம்பர் 15ம் தேதி கடைசி நாளாக உள்ள நிலையில் இது மேலும் நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
வருமான வரி தாக்கல்: செயற்கை நுண்ணறிவு மற்றும் சரிபார்ப்பு
சம்பளம் பெறுபவர்கள், வணிக உரிமையாளர்கள் உட்பட, தற்போது தங்கள் வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வரித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்திய தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரி விலக்குகளை தீவிரமாக ஆய்வு செய்கிறது.
வருமான வரி அறிக்கைகளில் மோசடியான விலக்குகள் கோருபவர்களைக் கண்டறிவதற்காக, நாடு முழுவதும் சரிபார்ப்பு நடவடிக்கையை வருமான வரித் துறை தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்ததற்கான விலக்குகள் உள்பட, மருத்துவக் காப்பீடு மற்றும் செலவுகள், வீட்டு வாடகைப்படி (HRA), கல்வி, வீட்டுக் கடன் வட்டி, வாகனக் கடன்களுக்கான விலக்குகள் ஆகியவை இதில் அடங்கும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தெரிவித்துள்ளது.
வருமான வரித் துறை - ஏஐ நுட்பம்
வருமான வரி தேதி நீட்டிக்கப்படுகிறது
வருமான வரி தாக்கல் சீசன் முழு வீச்சில் இருக்கும் நிலையில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மீண்டும் தள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போது செப்டம்பர் 15ம் தேதி கடைசி நாளாக உள்ள நிலையில் இது மேலும் நீட்டிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதில் தவறான கோரிக்கைகள் விடுத்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும். செலுத்த வேண்டிய வரிக்கு 24% வட்டி மற்றும் 200% வரை அபராதம் விதிக்கப்படலாம். வரி ஏய்ப்பு போன்ற கடுமையான குற்றங்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். செயற்கை நுண்ணறிவு அமைப்பு வருமான வரி அறிக்கை மற்றும் படிவம் 26AS ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளைக் கண்டறியும். இந்த ஆய்வில் அதிக விலக்கு கோரும் பன்னாட்டு நிறுவன ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் ஆகியோர் உள்ளனர். மோசடியான கோரிக்கைகளுக்கு எதிராக அபராதம் மற்றும் வழக்குத் தொடர வருமான வரித் துறை தயாராகி வருகிறது.
அரசு தரப்பு தகவல்படி, 150 இடங்களில் மேற்கொள்ளப்படும் இந்த சரிபார்ப்பு நடவடிக்கை, மோசடிகளுக்குப் பின்னால் உள்ளவர்களைக் கண்டறிந்து, பொறுப்புக்கூறலை உறுதி செய்யும். சிஏ-க்கள் மூலம் பொய்யான வருமான வரி தாக்கல் செய்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. டிஜிட்டல் பதிவுகள் உட்பட முக்கிய ஆதாரங்களைக் கேட்டு விசாரிக்கப்படும் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. சில வரி செலுத்துவோர், சிஏ-க்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பல மோசடி கும்பல்கள், போலி விலக்குகள் மற்றும் சலுகைகளைக் கோரி கணக்குகளைத் தாக்கல் செய்வது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வருமான வரி கடும் சோதனை
வருமான வரி கணக்குகளில் ஆதாரமில்லாமல் தவறான தகவல்களை அளிப்பவர்களுக்கு, இந்த நடவடிக்கை ஒரு எச்சரிக்கையாகும். வருமான வரித்துறை, தவறான தகவல்களைக் கண்டறிய பல தரவுத்தளங்களைப் பயன்படுத்துகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சோதனை நடத்தியதில், மோசடியான உரிமைகோரல்களுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
குறைபாடுகள் இருந்தால், வரி செலுத்துவோர் தங்கள் கணக்குகளைத் திருத்திக் கொள்ளுமாறு கேட்டதன் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் சுமார் 40,000 வரி செலுத்துவோர் தாமாக முன்வந்து ரூ.1,045 கோடி மதிப்பிலான தவறான உரிமைகோரல்களை திரும்பப் பெற்றுள்ளனர். எனினும், இன்னும் பலர் இணங்கவில்லை, மோசடி கும்பல்கள் பின்னணியில் பெரிய கூட்டம் இருக்கிறதா என்றும் விசாரிக்கப்படுகிறது. வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், வரி செலுத்துவோர் தங்கள் கணக்குகளைத் திருத்தம் செய்ய முன்வர வேண்டும். மேலும், வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
வருமான வரித் துறை, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வுக் கருவிகளின் உதவியுடன் வரிச் சலுகைகள் கோருவதை கவனமாக ஆராய்கிறது. தவறாகத் தாக்கல் செய்யப்பட்ட வரி அறிக்கைகளை ஆராய, நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த செயற்கை நுண்ணறிவு அமைப்பு, டிடிஎஸ் தரவு, வங்கிப் பதிவுகள் மற்றும் பிற ஆதாரங்களை ஆராய்கிறது. வருமான வரி அறிக்கைகள் (ITR), வருடாந்திர தகவல் அறிக்கை (AIS) மற்றும் படிவம் 26AS ஆகியவற்றில் உள்ள தரவுகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகளை உடனடியாகக் கண்டறிந்து, தவறுகள் அல்லது மோசடி முயற்சிகளைச் சுட்டிக்காட்டுகிறது.
No comments