Breaking News

அக்டோபர் முதல் 8 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. அரசு முக்கிய அறிவிப்பு!

 


வரும் 1-10-2025 முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண் சலுகை நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு. இந்த அறிவிப்பு யார் வெளியிட்டுருக்காங்க? ஈட்டிய விடுப்பு சரண் என்றால் என்ன? ஈட்டிய விடுப்பு சரண் மூலம் என்ன பயன்? இதன்மூலம் என்ன வகையான சலுகைகளை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பெற முடியும் என்பது குறித்து விவரங்களை பார்க்கலாம். 

ஈட்டிய விடுப்பு சரண் என்றால் என்ன? அதன் பயன்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் -முழு விவரம்

1. அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

2. கொரோனா தொற்றுநோய் காலத்தில் நிதிச்சுமை காரணமாக அரசு அலுவளர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

3. இந்த நடைமுறையை 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் செயல்படுத்த, 2025-26 ஆம் நிதியாண்டினுடைய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 

4. கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை விதி எண் 110ன் கீழ் 'ஈட்டிய விடுப்பு சரண்' செய்யும் நடைமுறை அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

5. இந்த நிலையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரபூர்வமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

 

6. பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்த காலத்திற்கு முன்பாக தற்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

7. இதன் மூலம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தாங்கள் ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை சரண் செய்து அதற்கான பணப்பலன்களை பெற்றுக்கொள்ளலாம். 

8. இதன்மூலம் கிட்டத்தட்ட 8 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். 

9. தமிழக அரசினுடைய ஈட்டிய விடுப்பு சரண நடைமுறையை செயல்படுத்துவதன் மூலம் கூடுதலாக 3,561 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

10. ஈட்டிய விடுப்பு சரண் என்பது பணமாக்கல் என்றும் அழைக்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் தங்கள் விடுப்பை (EL) எடுப்பதற்குப் பதிலாக அதை பணமாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இது சில நிபந்தனைகள் மற்றும் வரம்புகளுக்கு உட்பட்டது. 


No comments