10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்... பள்ளிக்கல்வித் துறை அதிரடி!
தமிழகத்தில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு முக்கியமான பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எனச் சொல்லலாம்.
கல்வி அதிகாரிகள் ஆலோசனை
முன்னதாக சென்னை
கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதன்மை கல்வி
அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான இரண்டு நாட்கள் ஆலோசனை
கூட்டம் நடந்து வருகிறது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்
மகேஷ் பொய்யாமொழி மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்
இந்த கூட்டத்தில்
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு முக்கியமான அறிவுரைகள் வழங்கப்பட்டு
வருகின்றன. அதில், 10, 11, 12 ஆகிய வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள்
பொதுத்தேர்வை சந்திக்க உள்ளனர். எனவே இவர்களுக்கு அதிக முக்கியத்துவம்
அளிக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் மாலை நேர வகுப்புகளை தினசரி நடத்த
வேண்டும் என்ற அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
மாலை நேர வகுப்புகள் கட்டாயம் இல்லை
மாலை 5 மணி
வரையோ அல்லது 5.30 மணி வரையோ மாலை நேர வகுப்புகளை நடத்தலாம் எனவும்
கூறப்பட்டது. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாலை நேர வகுப்புகள்
கட்டாயம் என்ற தகவல் வெளியான நிலையில் அதற்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு
தெரிவித்துள்ளது.இந்த தகவல் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் சார்பில் வெளியிடப்பட்டுள்ளதாக
தெரிகிறது. இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தரப்பில் சில
குறைகள் சுட்டிக் காட்டப்பட்டன. மேலும் சில பரிந்துரைகளும்
முன்வைக்கப்பட்டுள்ளன. அதில், பள்ளி மாணவர்களில் சிலர் ஊட்டச்சத்து
குறைபாடு காரணமாக உடல் மெலிந்து காணப்படுகின்றனர்.
மதிய உணவு திட்ட நீட்டிப்பு
இவர்களுக்கும்,
பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தை நீட்டிக்கலாம்
என கேட்டுக் கொண்டுள்ளனர். இதுதவிர அரசு பள்ளிகளில் காவலர்கள், துப்புரவு
பணியாளர்கள் கிடையாது. இதனால் மாணவர்கள் அதிகம் கொண்ட பள்ளிகளில் சிரமங்கள்
ஏற்படுகின்றன.
பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை
எனவே இதற்கு தீர்வு
காணும் வகையில் பள்ளிக்கல்வித் துறை உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்
என்று அதிகாரிகள் வலியுறுத்தினர். இவற்றுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரிய நடவடிக்கை எடுப்பார் என
எதிர்பார்க்கப்படுகிறது.
No comments