Breaking News

Pay Commission - Fitment Factor 2.57 பதிலாக 3.68 சதவீதமாக கணக்கிட அரசு ஊழியர்கள் கோரிக்கை - அடிப்படை ஊதியம் அதிகரிக்கும் :

 

ஜூலை மாதத்தில் வழங்கப்படும் முதல் பரிசாக அகவிலைப்படி அதிகரிப்பு இருக்கும். இரண்டாவதாக, ஃபிட்மென்ட் ஃபாக்டரில் அதிகரிப்பு ஏற்பட்டால், அது அவர்களுக்கு கிடைக்கும் இரண்டாவது பரிசாக இருக்கக்கூடும். 7வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய ஊழியர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஜூலை மாதம் ஃபிட்மென்ட் ஃபாக்டரை உயர்த்தி அறிவிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட நாள் கோரிக்கை:

ஃபிட்மென்ட் ஃபேக்டரை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் தான் அடிப்படை சம்பளத்தில் அதிகரிப்பு ஏற்படும் என்பது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

Fitment Factor

தற்போது, 7வது ஊதியக் குழுவின் கீழ், மத்திய ஊழியர்களுக்கு 2.57 சதவீதம் ஃபிட்மென்ட் ஃபாக்டர் வழங்கப்படுகிறது. அதை 3.68 மடங்காக உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது. ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.57 -ல் இருந்து 3.68 ஆக உயர்த்தினால் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000 -ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும். இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்படும்.

அடிப்படை ஊதியம் 2.57 சதவீதத்திற்கு பதிலாக 3.68 சதவீதமாக கணக்கிடப்படும்:


கடந்த 2016-ம் ஆண்டு ஃபிட்மென்ட் ஃபாக்டரை அரசு உயர்த்தியது. அதே ஆண்டில் 7வது ஊதியக் குழுவும் அமல்படுத்தப்பட்டது. அப்போது ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 6,000 -ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்ந்தது. அதேசமயம், மேல் உச்சவரம்பு ரூ.90,000 இல் இருந்து  ரூ. 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இப்போது மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை இந்த ஆண்டு மீண்டும் அதிகரிக்கக்கூடும்.

அடிப்படை ஊதியம் ரூ.18,000 இல் இருந்து ரூ. 26,000 ஆக அதிகரிக்கும்

அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் அடிப்படை ஊதியம் தீர்மானிக்கப்படுகின்ரது. இம்முறை ஃபிட்மென்ட் பேக்டர் அதிகரிக்கப்பட்டால், குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000 -ல் இருந்து ரூ.26,000 ஆக உயரும்.

No comments