Breaking News

அதிகமாக ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்..உஷார்..!!

ம் உடலுக்கு தேவையான தண்ணீர் சத்து கிடைக்காவிட்டால் உடலில் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். எனவே தண்ணீர் அதிகமாக பருக வேண்டியது அவசியம்.

அதிலும் கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தினால் உடல் விரைவில் வறட்சி அடைந்துவிடும். அடிக்கிற வெயிலுக்கு அனைவருக்கும் ஜில்லுனு தண்ணீர் குடிக்க தான் தோன்றும். இதற்காக கோடைகாலத்தில் பிரிட்ஜ் முழுவதும் தண்ணீர் பாட்டில்களை நிரப்பி வைத்து விடுகிறோம்.ஆனால் இதனை அடிக்கடி அருந்துவதால் உடலில் ஏற்படும் தீமைகள் பற்றி நமக்கு தெரிவதில்லை. எனவே வெயில் காலத்தில் அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டுமே தவிர ஐஸ் வாட்டர்களை அதிகமாக அருந்த கூடாது. இதற்கு பதிலாக மண் பானையில் தண்ணீர் வைத்து அருந்தலாம். ஓகே வாருங்கள், ஐஸ் வாட்டர் குடிப்பதால் உடலில் என்னென்ன ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

குளிர்ந்த நீரைக் குடிப்பதை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் காரணங்கள் என்னவென பார்க்கலாமா,

1. நீங்கள் குளிர்ந்த நீர் அல்லது வேறு ஏதேனும் குளிர்ந்த பானத்தை குடிக்கும்போது, அது உங்கள் நீரேற்றத்தைத் தடுக்கிறது, உங்கள் செரிமானத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் உங்கள் இரத்த நாளங்களைச் சுருக்குகிறது.

2. குளிர்ந்த நீரைக் குடிப்பதால் உங்கள் உடலின் உள் வெப்பநிலை மாறுகிறது. உங்கள் உடல் இப்போது உணவைச் செரிப்பதற்கும், ஆற்றலை உற்பத்தி செய்வதற்கு ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் பதிலாக உங்கள் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தச் சேமிக்கப்பட்ட ஆற்றலைப் பயன்படுத்துகிறது.

3. உணவுக்குப் பிறகு குளிர்ந்த நீரை அருந்தும்போது அதிகப்படியான சளி உருவாகிறது. இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டில் குறைவதற்கு வழிவகுக்கிறது, இது உங்களை நோய் மற்றும் சளி பிடிக்க வாய்ப்புள்ளது .

4. சாப்பிட்டு முடித்தவுடன் ஜில் தண்ணீரை குடிப்பதால், நாம் எடுத்துக்கொண்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுவதால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனை ஏற்படுவது மட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.

எனவே, அந்த குளிர்ந்த நீரை குடிக்கும் பழக்கத்தை விடுங்கள். வெதுவெதுப்பான அல்லது அறை வெப்பநிலையில் தண்ணீர் உடலுக்கு சிறந்தது . கொஞ்சம் கஷ்டம் தான் ஆனாலும் உடலுக்கு நல்லது என்கிற போது குடிப்பதில் தவறில்லை.

எனவே அடுத்த முறை நீங்கள் உணவருந்தும்போது, அதற்கு பதிலாக அறை வெப்பநிலை தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

அப்படி இல்லையா. மண்பாண்ட நீரையாவது எடுத்துக் கொள்ளுங்கள்.

No comments