இனி பள்ளி கல்லூரி சர்டிபிகேட் தொலைந்து உடனே பெறலாம்!! இதோ வழிமுறை!!
இனி பள்ளி கல்லூரி சர்டிபிகேட் தொலைந்து உடனே பெறலாம்!! இதோ வழிமுறை!!
நாம் நமது சான்றிதழ்களை எப்போதாவது தொலைத்து விட்டால் அதை எப்படி மீட்டு எடுக்கலாம் என்பதை பற்றி இங்கு காண்போம்.
முதலில் நம் சான்றிதழ்களை எங்கு தொலைத்தோம், எந்த இடத்தில் தொலைத்தோம், எப்போது தொலைத்தோம், என்பது பற்றி போலீசாருக்கு புகார் கொடுக்க வேண்டும்.
இதற்கு பதிலாக eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தின் வழியாகவும் புகார் கொடுக்க முடியும்.
புகார் அளித்த பின்னர் போலீசார் நாம் சான்றிதழ் தொலைத்த இடத்தில் விசாரணை மேற்கொள்வார்கள். அப்போதும் சான்றிதழ்கள் கிடைக்கவில்லை என்றால் கண்டுபிடிக்க முடியாத சான்றிதழ் அதாவது நான் டிரேசபிள் சர்டிபிகேட் என்ற சான்றிதழை தருவார்கள்.
இந்த நபர் அவருடைய சான்றிதழை தொலைத்து விட்டார் இதை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை உணர்த்தும் விதமாக இந்த நான் டிரேசபிள் சர்டிபிகேட் வழங்கப்படுகிறது.
அவசரமான ஒரு சூழ்நிலையில் சான்றிதழ் இல்லாத காரணத்தால் இந்த நான் டிரேசபிள் சர்டிபிகேட்-டை நாம் உபயோகப்படுத்தலாம்.
ஆனால் நேர்காணல் போன்ற நிகழ்வுகளுக்கு செல்லும்போது இதை உபயோகப்படுத்த முடியாது.
இந்த நான் டிரேசபிள் சர்டிபிகேட்- டை பயன்படுத்தி நாம் நமது நகல் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த என்டிசி சான்றிதழ் தற்காலிகமாகவும் நாம் தொலைத்த சான்றிதழை திரும்ப பெறுவதற்கும் உதவுகிறது.
நம் பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று தாசில்தாரிடம் இந்த என்டிசி சான்றிதழை காட்டினால் அவர் ஒரு ஆவணத்தை நமக்கு தருவார்.
இதை நாம் பெற்றுக் கொண்டு நமக்கு தேவையான சான்றிதழ் வாங்கிய இடத்தில் அதாவது பள்ளி சான்றிதழ்களை தொலைத்திருந்தால் பள்ளிக்கு சென்று இதை காட்ட வேண்டும். கல்லூரி சான்றிதழ்களை தொலைத்திருந்தால் கல்லூரிகளுக்கு சென்று இதை காட்ட வேண்டும்.
பிறகு சான்றிதழில் இருக்கின்ற ஒரு சில தகவல்களை விண்ணப்பமாக எழுதி அவர்களிடம் தர வேண்டும்.
நமக்கு எந்த சான்றிதழ்கள் வேண்டுமோ அதற்கேற்ற படி ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை நாம் செலுத்த வேண்டும்.
இதன் பிறகு பள்ளிகள் அல்லது கல்லூரிகளில் இருந்து இந்த ஆவணங்களை மாவட்ட கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைப்பார்கள்.
பின்னர் இந்த தேதிக்குள் உங்கள் சான்றிதழை பெற்றுக் கொள்ளுங்கள் என்று ஒரு விண்ணப்ப கடிதத்தை நமக்கு அனுப்பி வைப்பார்கள்.
குறிப்பிட்ட தேதிக்குள் நாம் வாங்கவில்லை என்றால் இரண்டு மூன்று மாதங்கள் கழித்து நம் ஆதார் கார்டில் உள்ள முகவரிக்கு அவர்களே அனுப்பி வைத்து விடுவார்கள்.
சுனாமி பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர்களில் சான்றிதழ்களை தொலைத்து விட்டோம் என்று tnsevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கும் இரண்டு மூன்று மாதங்கள் ஆகும். அதேபோல் இதற்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டி இருக்கும்.
No comments