Breaking News

உங்கள் பட்டா மற்றும் பத்திரம் குறித்து முழு விவரங்களையும் இனி ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ளலாம்!! இதோ முழு விவரம்!!

 

ங்கள் பட்டா மற்றும் பத்திரம் குறித்து முழு விவரங்களையும் இனி ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ளலாம்!! இதோ முழு விவரம்!!

பட்டா என்பது வருவாய் துறையில் இருந்து கொடுக்கப்படக்கூடிய ஒரு ஆவணமாகும்.இதில் அந்தப் பட்டாவின் உரிமையாளரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். இதில் தனிப்பட்டா கூட்டு பட்டா என்று பல வகைகள் உள்ளன.

அதாவது ஒரு இடத்திற்கு ஒரே ஒரு உரிமையாளர் மட்டும் இருப்பதை தனிப்பட்டா என்பார்கள்.

கூட்டு பட்டா என்பது ஒரு இடத்திற்கு இரண்டு அல்லது மூன்று நபர்கள் உரிமையாளராக இருப்பார்கள்.

இதே போல் சிட்டா என்பது அந்த நிலத்தின் முழு விவரத்தைப் பற்றியும் அதாவது அந்த நிலம் நன்செய் நிலமா புன்செய் நிலமா என அனைத்து விவரங்களையும் உள்ளடக்கியது சிட்டா என்பார்கள்.

பத்திரம் என்பது பதிவுத் துறையிலிருந்து பெறக்கூடிய ஒரு ஆவணம். ஒருவரிடம் இருந்து நிலம் வாங்கியதை பதிவுத்துறையில் பதிவு செய்வதே பத்திரம்.

பதிவு பத்திரம் இல்லாமல் பட்டா வாங்க முடியாது என்றும் அந்த பதிவு பத்திரத்தில் இருக்கும் பெயரே செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதில் தப்பாக இருக்கும் பட்சத்தில் மூலப்பத்திரத்தில் இருக்கும் உரிமையாளரின் பெயரே செல்லுபடி ஆகும் என்றும் கூறப்படுகிறது.

நிலத்தை மாற்றி பத்திரம் வாங்கிய உடனேயே பட்டாவையும் கையோடு வாங்க வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இதற்கு முன்பு வந்த ஒரு வழக்கில் பத்திரத்தில் இருக்கும் பெயரின் நபரே உரிமையாளர் என்று கூறப்பட்டது.

பட்டா என்பது சொத்தின் உரிமை ஆவணம் கிடையாது என்றும், அதை வைத்து உரிமை கூற முடியாது என்றும் கூறினர்.

மற்றுமொரு வழக்கு வெளிவந்த நிலையில் பதிவு பத்திரம் இல்லாமல் அந்த இடத்தை சொந்தம் கூற முடியாது என்று கூறினர்.

இதனால் பத்திரத்தில் இருக்கும் பெயரே செல்லுபடி ஆகும் என்று கூறப்படுகிறது.

மேலும் பட்டாவில் இருக்கும் பெயரை தெரிந்து கொள்ள eservices.tn.gov.in. என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இதேபோல் பத்திரத்தில் இருக்கும் பெயரை தெரிந்து கொள்ள tnreginet.gov.in. என்று இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

No comments