Breaking News

மாற்றுத்திறனாளி மாணவர் அளித்த அன்பு பரிசு.! நடிகர் விஜய் நெகிழ்ச்சி.!


 

டிகர் விஜய்யை படமாக வரைந்து பரிசளித்த பரிசளித்த இரு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவர் கிர்த்தி வர்மாவை கட்டி அணைத்து பாராட்டினார்.

நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் விருதுகள் வழங்கப்படும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்கு தடபுடளான சாப்பாடு தயாராகும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களில் ஒருவரான கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளியை சேர்ந்த, இரு கைகளை இழந்த மாணவன் கிர்த்தி வர்மன் 437 மதிப்பெண்கள் எடுத்து, அரசுப்பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

விழாவில் நடிகர் விஜய்க்கு ஓவியம் ஒன்றை வரைந்து பரிசாக அளித்துள்ளார்.நடிகர் விஜய்யுடன் மாணவர் கிர்த்தி வர்மா உரையாடும் போது தன்னையும் அறியாமல் கண் கலங்கினார். தற்போது இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.

No comments