Breaking News

உங்க வீட்ல WiFi இருக்கா. ஹேக் ஆகாம இருக்க இதை உடனே பண்ணிடுங்க!


வீட்டில் வைஃபை வைத்திருப்பது லேப்டாப்கள், மொபைல்கள் போன்றவற்றை பயன்படுத்துவதுடன் அமேசான் அலெக்சா போன்ற ஸ்மார்ட் கேட்ஜெட்டுகளை பயன்படுத்துவதையும் எளிதாக்குகிறது.

எனினும், வயர்லெஸ் மூலமாக இணைக்கப்படும் சாதனங்கள் அதிக அளவில் அதிகரித்து வருவதால், வீட்டில் பயன்படுத்தும் வைஃபையின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் அவசியமாகிறது. இதற்காக நீங்கள் ஒரு டெக்னிஷனையோ அல்லது செக்யூரிட்டி எக்ஸ்பெர்ட்டையோ அணுக வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் வைஃபை நெட்வொர்க்கை பாதுகாப்பாக எப்படி வைப்பது என்பதை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.


உங்கள் வைஃபைக்கு எப்பொழுதும் ஒரே பெயர் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தாதீர்கள்: உங்கள் வைஃபை நெட்வொர்க்கை பாதுகாப்பாக வைப்பதற்கு இது ஒரு எளிமையான வழி, அதனை நீங்கள் பின்வருமாறு செய்யலாம். 1.விண்டோஸ் கமெண்ட் திறக்கவும். 2. அதில் என்பதை 'ipconfig' என்பதை டைப் செய்யவும். 3. உங்கள் ஐபி அட்ரஸை லோகேட் செய்யுங்கள். 4. பிரவுசரின் அட்ரஸ் பாக்ஸில் உங்கள் ஐபி அட்ரஸை டைப் செய்யவும். 5. உங்கள் ரௌட்டரின் லாகின் கிரெடன்ஷியல்களை என்டர் செய்யவும். 6. வைஃபை செட்டிங்ஸை திறக்கவும். 7. SSID மற்றும் பாஸ்வேர்டை மாற்றவும்.


உங்கள் வைஃபை நெட்வொர்க்கை எல்லோரிடமும் பகிர வேண்டாம்: பிறருக்கு பகிர்ந்தளிப்பது நல்ல குணம் தான். ஆனால் உங்களுக்கு தெரியாத ஒரு நபருடன் உங்கள் வைஃபை நெட்வொர்க்கை ஷேர் செய்வது நல்லதல்ல. உதாரணமாக உங்கள் வீட்டிற்கு ஏதேனும் ரிப்பேர் செய்ய வரும் காண்ட்ராக்டருக்கு உங்கள் வைஃபை பாஸ்வேர்டை ஷேர் செய்வது போன்றவற்றை தவிர்க்கவும்.


கெஸ்ட் வைஃபை நெட்வொர்க்கை உருவாக்கவும்: மேலே உள்ள விதியை உங்களால் பின்பற்ற முடியாது என்ற சூழ்நிலையில் உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்காக தனியாக ஒரு கெஸ்ட் வைஃபை நெட்வொர்க்கை உருவாக்கிக் கொள்ளலாம். இதன் மூலமாக நீங்கள் அவர்களுக்கு உங்களுடைய இன்டர்நெட்டை ஷேர் செய்யலாம். அதே சமயம் உங்களின் பிரைமரி வயர்லெஸ் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ள ஃபோல்டர்கள், பிரிண்டர்கள், ஸ்டோரேஜ் டிவைஸ்கள் மற்றும் நெட்வொர்க் டிவைஸ்கள் போன்றவற்றை ஹைடு செய்து கொள்ளலாம்.


வைஃபை என்கிரிப்ஷனை எனேபிள் செய்யவும்: பெரும்பாலும் எல்லா WPA2 மற்றும் WPA3 ரவுட்டரும் என்கிரிப்ஷனை வழங்குகின்றன. இதனை ஆன் செய்வது லாகின் செய்யாமல் உங்கள் வைஃபை நெட்வொர்க்கை பிறர் ரகசியமாக பயன்படுத்துவதை தடுக்க உதவும்.


ஃபயர்வாலை எனேபிள் செய்யவும்: உங்கள் வயர்லெஸ் நெட்வொர்க்கில் தேவையற்ற டிராஃபிக்கை தவிர்க்க ரவுட்டரின் ஃபயர்வாலை எனேபிள் செய்து கொள்ளுங்கள். இதனைச் செய்வதற்கு உங்கள் ரவுட்டர் செட்டிங்கில் லாகின் செய்து, உங்கள் ஐபி அட்ரஸ் ஐ பயன்படுத்தி ரவுட்டரின் அட்வான்ஸ்டு செட்டிங்கில் உள்ள ஃபயர்வாலை நீங்கள் ஆன் செய்ய வேண்டும்.


நீங்கள் வீட்டில் இல்லாதபோது வைஃபையை சுவிட்ச் ஆஃப் செய்யவும்: நீங்கள் வீட்டை விட்டு எங்காவது வெளியே கிளம்பும் பொழுது ரவுட்டரை டிசேபிள் செய்வது உங்கள் வைஃபை நெட்வொர்க்கை பாதுகாப்பாக வைக்க உதவும்.


அவ்வப்போது ரவுட்டரின் ஃபெர்ம்வேரை அப்டேட் செய்யவும்: இதனைச் செய்வதற்கு நீங்கள் ரவுட்டர் உற்பத்தியாளரின் வெப்சைட்டுக்கு சென்று அங்கு ஃபெர்ம்பேர் அப்டேட் ஃபைலை டவுன்லோட் செய்ய வேண்டும். அடுத்தபடியாக உங்கள் வயர்லெஸ் ரவுட்டருக்கு நேரடியாக அதனை அந்த அப்டேட்டை இன்ஸ்டால் செய்யவும்.


ரிமோட் ஆக்சஸை டிசேபிள் செய்யவும்: ரிமோட் ஆக்சஸை எனேபிள் செய்வது பல்வேறு பகுதிகளில் இருந்து உங்கள் வைஃபை நெட்வொர்க்கை எளிதாக பயன்படுத்த உதவும். ஆனால் இது பாதுகாப்பு சார்ந்த பிரச்னைகளையும் அதிகரிக்கும். ஆகவே தேவைப்படாத சமயத்தில் ரிமோட் ஆக்சஸை டிசேபிள் செய்வது ஹேக்கர்களிடமிருந்து உங்கள் வைஃபை நெட்வொர்க்கை பாதுகாக்க உதவும்.

No comments