Breaking News

மத்திய அரசு ஊழியர்களுக்கு பென்சன் திட்டத்தில் புதிய ட்விஸ்ட்..ஜாக்பாட்!


தேசிய பென்சன் திட்டத்துக்கு பதிலாக 45 சதவீதம் வரை பென்சன் வழங்கும் புதிய திட்டம் ஒன்று அமலுக்கு வரவிருக்கிறது.

ஹேப்பி நியூஸ்!

நீங்களோ அல்லது உங்களது குடும்பத்தில் யாராவது மத்திய அரசு ஊழியராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தரும். தேசிய பென்சன் திட்டத்துக்கு (NPS) எதிரான போராட்டங்கள் காரணமாக, மத்திய அரசு இப்போது ஊழியர்களுக்கான பென்சனுக்கு புதிய ஃபார்முலாவை தயாரித்துள்ளது.

​மினிமம் பென்சன் திட்டம்!​

தற்போது நடைமுறையில் உள்ள சந்தையுடன் இணைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைத்து, ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்தத் திட்டத்தில் ஊழியர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 40 முதல் 45 சதவீதம் அளவுக்கு பென்சன் வழங்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

பென்சன் விவகாரம் தொடர்பாக ஆலோசிப்பதற்காக மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது. இந்த ஓய்வூதியக் குழு அமைக்கப்பட்ட பிறகு தற்போது புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்து அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. 

தேர்தலுக்கு முன்!

அடுத்த ஓராண்டில் மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் மற்றும் 2024 லோக்சபா தேர்தலை மனதில் வைத்து மத்திய மோடி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களைக் கவரும் வகையில் விரைவில் குறைந்தபட்ச பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

​தேசிய பென்சன் திட்டம்!

கடந்த சில ஆண்டுகளாகவே பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கான போராட்டம் அதிகமான அளவில் நடந்து வருகிறது. அதேநேரம், தற்போது நடைமுறையில் இருக்கும் தேசிய ஓய்வூதியத் திட்டம் குறித்து அறிக்கை அளிக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. தற்போதைய தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் அடிப்படைச் சம்பளத்தில் ஊழியர்கள் 10 சதவீதமும், அரசு 14 சதவீதமும் பங்களிக்கின்றனர்.

பழைய பென்சன் திட்டம் ஏன்?

தேசிய பென்சன் திட்டத்தின் கீழ் உள்ள ஊழியர்களின் பென்சன் தொகை என்பது ஓய்வூதிய சந்தையில் இருந்து வரும் வருமானத்தைப் பொறுத்தது. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், கடைசி ஊதியத்தின் 50 சதவீத தொகை உத்தரவாத ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இதனால்தான் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

​அதற்கு வாய்ப்பே இல்லை!

குறைந்தபட்ச ஊதிய திட்டம் தொடர்பாக புதிய விதி அமல்படுத்தப்பட்டால், ஊழியர்கள் தங்களது கடைசி சம்பளத்தில் 40 முதல் 45 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெற முடியும். அதேநேரம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவரும் திட்டம் மத்திய அரசிடம் இப்போது இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

​பிரச்சினை இருக்காது!

ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதாக அறிவித்துள்ளன. பழைய ஓய்வூதிய முறைக்கு திரும்பிய மாநிலங்களின் கவலைகளை தீர்க்கும் வகையில் புதிய ஓய்வூதிய முறை தயாரிக்கப்படும் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  

No comments