Breaking News

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 15 - 21


மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு, சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 15-06-2023 அன்று சூரிய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் தேவையற்ற மனசஞ்சலம் அகலும். எந்த ஒரு காரியம் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பீர்கள். உங்களுடைய பணத்தேவை பூர்த்தியாகும். வெளியூரில் இருந்து வரும் கடிதங்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய உத்வேகம் பிறக்கும். தொழில் தொடர்பான விவகாரங்களில் இருந்து வந்த வீண் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்படும். புதிய வேலையில் சேர்ந்தவர்களுக்கு பணி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும். குடும்ப உறுப்பினர் உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.

பெண்களுக்கு எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுக போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். அரசியல்துறையினருக்கு சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். மாணவர்களுக்கு ஆசிரியர் ஆதரவு கிடைக்கும். சக மாணவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும், மனதில் தைரியம் உண்டாகும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சூர்யன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, ராகு, சந்திரன் என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 15-06-2023 அன்று சூரிய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எதிர்பாராத நல்ல திருப்பம் உண்டாகும். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். திறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். வழக்குகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபார போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆனால் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும். கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக்கும். உறவினர்கள் வருகையும் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.

பெண்களுக்கு திறமையாக சமாளித்து எந்த பிரச்சினையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். அரசியல்துறையினருக்கு தடைபட்டு வந்த காரியங்களில் தடை மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய்தொழில் சிறக்கும்.

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் குரு, ராகு, சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 15-06-2023 அன்று சூரிய பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் பொருள் வரவும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம். புதியதாக வீடு மனை வாகன சேர்க்கை ஏற்படும். செய்தொழிலில் மனநிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும்.மேலதிகாரிகளின் ஆதரவை உத்தியோகஸ்தர்கள் பெறுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். பெண்களுக்கு வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு போட்டிகள் நீங்கும். உங்களுக்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். பொருளாதாரம் உயரும். எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பல வகையான யோகங்கள் ஏற்படும். அரசியல்துறையினருக்கு வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

பரிகாரம்: சுந்தர காண்டம் படித்து வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூன் 15 - 21

> மேஷம், ரிஷபம், மிதுனம்
> கடகம், சிம்மம், கன்னி
> துலாம், விருச்சிகம், தனுசு
> மகரம், கும்பம், மீனம்

No comments