Breaking News

ஜூலை மாதத்தில் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்! மிஸ் பண்ணாதீங்க!

 

னியும் ஆடியும் இணையும் அற்புதமான மாதம் ஜூலை மாதம் . சூரியன் மிதுனம் மற்றும் கடக ராசியில் பயணம் செய்யும் மாதம்.

இந்த மாதத்தில் நவகிரகங்களின் பயணம், கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வைகளால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான யோகம் உருவாகலாம் என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள். குரு மங்கல யோகத்தால் மேஷம், ரிஷபம், தனுசு, மகரம், கும்ப ராசிக்காரர்களுக்கு யோகமான காலம் இது. பொதுவாக இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் பலப்படும் . பணியிடத்தில் பதவி உயர்வு, பாராட்டுக்கள் வந்து சேரும். பொருளாதார நிலை மேம்படும் .


மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு, பாராட்டுக்கள் நிச்சயம் பணம் பல வழிகளில் வந்து சேரும். மேலதிகாரியின் நன்மதிப்பை பெறலாம். தொழில் லாபம் குவியும் காலம். பொன், பொருள் ஆபரண சேர்க்கை நிச்சயம். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் காணலாம்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இதுவரை தடை பட்ட காரியம் நிறைவேறும். பணியிடத்தில் மாறுதல்கள் ஏற்படும் . புதிய முயற்சிகளில் நற்பலன்களை பெறலாம். பூர்வீக சொத்துக்களில் முதலீடு செய்வது மிகப்பெரிய பலன்களைத் தரும். தொழிலில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு வந்து சேரும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களே ஜூலை மாதத்தில் கடன் சுமை குறையும். அரசாங்க உதவி கிடைக்கப்பெற்று அமோக லாபம் பெறலாம். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் தொழில் விருத்தி அடையும். பொருளாதாரம் வலுவடையும்.ஆரோக்கியம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தில் அமோகமான பணவரவை பெறலாம். குடும்பத்துன் வெளியூர் பயணங்களால் குதூகலம் அதிகரிக்கும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். திடீர் பணவரவால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். புதிய முயற்சிகளில் வெற்றி காணலாம். சுபகாரியங்கள் கைகூடும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களே இது நாள் வரையில் நீங்கள் எதிர்பார்த்த இனிய செய்தி வந்து சேரும். தொழிலில் லாபம் பெருகும். உடல் ஆரோக்கியம் கூடும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்பட எதிர்பார்த்த நன்மை கிட்டும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறலாம். புதிய முயற்சிகளில் நற்பலன்கள் கிட்டும். பணியிடத்தில் ஆதரவு பெருகும். ஜூலை மாதத்தில் அடிக்கப்போகும் அதிர்ஷ்டத்தால் திக்கு முக்காடப் போகிறீர்கள்.

No comments