இரவில் தூக்கம் வராமல் தவிக்கிறீர்களா... இந்த உணவுகளை முயற்சியுங்கள்!
தூக்கமின்மை தற்போது உலகெங்கிலும் உள்ள மக்களைப் பாதிக்கும் ஒரு தீவிரமான உடல்நலப் பிரச்சினையாக உள்ளது.
நீங்கள் நன்றாக தூங்க உதவும் சில உணவுகள் உள்ளன. அதனை அறிந்து
கொள்ளுங்கள்.குறைந்த அளவிலான மெலடோனின் மற்றும் சீரடோனின்
தூக்கமில்லாததற்கு காரணம். மெக்னீசியம், கால்சியம், துத்தநாகம் மற்றும் சில
பி வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தூக்கத்திற்கு உதவி
புரிகின்றன. எப்படி என்றால், இவை அத்தியாவசிய அமினோ அமிலம் டிரிப்டோபானை
மூளை செரோடோனினாக மாற்ற துணை புரிகின்றன.
பின்னர் செரோடோனின் மெலடோனின் ஆக மாற்றப்படுகிறது. மேற்கூறிய சத்துக்கள் கொண்ட உணவுகளின் பட்டியல் இங்கே.வெது வெதுப்பான பால் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பால் நல்ல இரவு தூக்கத்தைத் தூண்டும். பால் டிரிப்டோபனின் சோர்ஸ் ஆக உள்ளது. இது மனித உடலால் உற்பத்தி செய்யப்படாத அத்தியாவசிய அமினோ அமிலமாகும்.
டிரிப்டோபான் செரோடோனின் முன்னோடியாகும், இது மெலடோனினாக மாற்றப்படும். இவை இரண்டும் தூக்கத்தை மேம்படுத்தி, உடல் தளர்வைத் தூண்டும். பார்லி புல் காமா அமினோப்யூட்ரிக் அமிலம், கால்சியம், டிரிப்டோபான், துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உட்பட பல தூக்கத்தை ஊக்குவிக்கும் சேர்மங்கள் இந்த பார்லி புல்லில் நிறைந்துள்ளது. இதன் பொடியை வெது வெதுப்பான நீர் அல்லது பாலில் கலந்து குடிக்கலாம்.வால்நட்கள்இவை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கின்றன, மேலும் இவை உங்கள் விந்தணுக்களின் இயக்கத்தையும் மேம்படுத்தும்.வறுத்த பூசணி விதைகள் பூசணி விதைகள் டிரிப்டோபனின் இயற்கையான மூலாதாரமாக உள்ளது. இது தூக்கத்தை ஊக்குவிக்கும் அமினோ அமிலம் என முன்பே பார்த்தோம். பூசணி விதைகளில் உள்ள துத்தநாகம், தாமிரம் மற்றும் செலினியம் ஆகியவை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்.வாழைப்பழம் வாழைப்பழத்தில் மெக்னீசியம், டிரிப்டோபான், வைட்டமின் பி6, கார்போஹைட்ரேட் மற்றும் பொட்டாசியம் போன்ற தூக்கத்தை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இவை தூக்கத்தை மேம்படுத்தும்.ஊறவைத்த சியா விதைகள்டிரிப்டோபான் நிறைந்த சியா விதைகள் மனநிலையை மேம்படுத்துவதன் மூலம் தூக்க முறைகளை ஒழுங்குபடுத்துகிறது. ஊறவைத்த சியா விதைகளை இரவில் உட்கொள்ளுங்கள்.

No comments