திடீர்னு வேற பள்ளிக்குப் போகச் சொன்னா, என்ன செய்வோம்?'- இழுத்து மூடப்பட்ட பள்ளி; குமுறும் மாணவர்கள்:
ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளுக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
நாளைய தினம் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளி வகுப்புகள் தொடங்குகின்றன. இந்த நிலையில், திருச்சி அருகே நாகமங்கலம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்த பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டதால், அங்குப் படித்துவந்த தங்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டிருப்பதாகப் பெற்றோர்கள் குமுறுகின்றனர்.
திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அளுந்தூர் கிராமத்தின் நாகமங்கலம் பகுதியில் புனித மரியன்னை தொடக்கப்பள்ளி, ஜெரிக்கோ உடல் ஊனமுற்றோர் பயிற்சிப் பள்ளி மற்றும் புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி ஆகியவை அமைந்திருக்கின்றன.
1989-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் சிலரும், பள்ளியின் விடுதியில் தங்கிப் படித்துவருகின்றனர்.
அதற்கு நீதிமன்றம், `நீர்நிலை ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும்' என உத்தரவிட்டிருக்கிறது. அதையடுத்து பள்ளி நிர்வாகத்துக்கு இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பள்ளி நிர்வாகம் செவிசாய்க்காமல், அலட்சியம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகத்தினர் அந்தப் பள்ளிகளைப் பூட்டி சீல் வைத்தனர்.
பள்ளிகளுக்கு சீல்வைக்கப்பட்ட சம்பவம் குறித்து பள்ளி தரப்பிலிருந்து மாணவர்களின் பெற்றோருக்குத் தெரியப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், விவரமறியாத மாணவ, மாணவிகள் நேற்று கோடை விடுமுறை முடிந்து உற்சாகத்துடன் பள்ளிக்குச் சென்றிருக்கின்றனர். ஆனால், பள்ளிகள் பூட்டப்பட்டிருந்ததால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
இது தொடர்பாகப் பள்ளி நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, "இந்தப் பள்ளி தற்போது திறக்கப்படாது. உங்களுக்கெல்லாம் மாற்றுப் பள்ளி ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது" எனக் கூறியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து மாணவர்கள் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிக்கு அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய மாணவர்கள், ``நாங்கள் வேறு எந்தப் பள்ளிக்கும் செல்ல மாட்டோம், இந்தப் பள்ளியிலேயேதான் நாங்கள் படிப்போம். திடீரென வேறு பள்ளிக்கு மாற்றினால், எங்களின் கல்வி பாதிக்கும். எனவே, நாங்கள் இங்கேயே தொடர்ந்து படித்திட வழிவகை செய்ய வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக அங்கிருந்த மாணவி ஒருவரின் தாயார் நம்மிடம் பேசினார். ``இன்னைக்கு காலைல பொண்ண ஸ்கூல்ல விடும் போதுதான், `இனிமேல் ஸ்கூல திறக்கமாட்டோம்'னு சொல்றாங்க. என் பொண்ணு ப்ளஸ் டூ படிக்கிறாள், இனிமேல் அவளுக்கு டீசி வாங்கி, தனியா யூனிஃபார்ம் தைச்சு படிக்க வைக்கிறதுலாம் முடியாத காரியம். கட்டணம் கம்மியாவும், கோச்சிங் நல்லாவும் இருக்குறதாலதான் என்னோட பொண்ண இங்க சேர்த்தேன். நாற்பது வருஷமா இந்த ஸ்கூல் இங்கதான் இருக்கு.
இப்போ திடீர்னு இப்படிச் சொன்னா.... படிக்கிற பிள்ளைங்கயெல்லாம் எங்க போவாங்க... இந்த வருஷம்கூட புதுசா அட்மிஷன்லாம் போட்டிருக்காங்க. வேற ஸ்கூல்ல படிக்கச் சொன்னா, இங்கேருந்து ரொம்ப தூரமா பயணிச்சு போகுற மாதிரி இருக்கும். எங்கப் பிள்ளைகளோட பாதுகாப்புக்கு என்ன பண்றது... நான் ஒரு கூலித்தொழிலாளி, என் வசதிக்கு இந்த ஸ்கூல்தான் பொருத்தமா இருக்கு.
இங்கயே எங்க பிள்ளைங்க தொடர்ந்து படிக்க ஏற்பாடு செய்யணும்" என்று முடித்தார் வருத்தத்துடன்.
இந்த விவகாரம் தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், ஸ்ரீரங்கம் வருவாய் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடமும், அவர்களின் பெற்றோர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அரசுப்பள்ளிக்கு பொதுப்பாதை இல்லை; பள்ளி திறந்த முதல் நாளில் முள்வேலியால் தவித்து நின்ற மாணவர்கள்!
No comments