Breaking News

ஞாயிற்றுக்கிழமை ராசிபலன் | தொழில் செய்யும் இந்த ராசியினருக்கு இன்று (ஜூன் 18, 2023) லாபம் அதிகரிக்கும்.!

மேஷம்: புதிய வேலைகளை துவங்குவதற்கு மிகவும் ஏற்ற நாள்.

புதிய கூட்டாளியுடன் சேர்ந்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்புகள் உண்டு.
பரிகாரம் - அனுமன் சலிசாவை உச்சரிக்க வேண்டும்.

ரிஷபம்:
நீண்ட காலங்களாக தீட்டி வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கு இன்று ஏற்ற நாள். நல்ல முடிவுகள் கிடைக்கும். அலுவலகம் சொல்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உழைப்பின் மூலம் வெற்றிகளை ஈட்டுவீர்கள். பாராட்டுக்கள் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும்.
பரிகாரம் - விநாயகரை வழிபட வேண்டும்.


மிதுனம்:
இலக்கியம், கலை, எழுத்து துறைகளில் இருப்பவர்களுக்கு தங்கள் திறமைகளை நிரூபிக்க வாய்ப்புகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய தொழில் துவங்க வாய்ப்புகள் உண்டு. அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். புகழ் அதிகரிக்கும்.
பரிகாரம் - சூரிய பகவானுக்கு நீர் காணிக்கை அளித்து வழிபட வேண்டும்.


கடகம்:
பொருளாதார நிலையில் இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும். செல்வம் அதிகரிக்கும். புதிய வழிகளில் பண வரவு உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். லாபம் அதிகரிக்கும்.
பரிகாரம் - மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.


சிம்மம்:
இன்று உங்களது புகழ் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சுமூகமாக நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதாரம் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.
பரிகாரம் - சிவலிங்கத்திற்கு நீர் காணிக்கை அளித்து வழிபட வேண்டும்.


கன்னி:
அலுவலகத்தின் உயர் அதிகாரிகளிடம் இருந்து தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு.
பரிகாரம் - விஷ்ணு சஹஸ்ரநாமத்தை உச்சரிப்பது வெற்றியை கொடுக்கும்.


துலாம்:
தொழில் செய்பவர்களுக்கு மங்களகரமான நிகழ்வுகள் நடந்தேறும். உயர்கல்விக்காகவும் அல்லது வேலை சம்பந்தமாகவும் வெளிநாட்டு வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இன்று சற்று ஏமாற்றங்கள் ஏற்படலாம்.
பரிகாரம் - ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.


விருச்சிகம்:
அலுவலகத்தில் மிகவும் புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். தொழில் நன்றாக இருக்கும். பல்வேறு ஒப்பந்தங்கள் உங்கள் திறமையின் மூலம் கையெழுத்தாகும். மிகவும் வெற்றிகரமான நாளாக இருக்கும். இனிமையாக பேசுவது மிகவும் நல்லது.
பரிகாரம் - விநாயகரை வழிபட வேண்டும்.


தனுசு:
அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் பல்வேறு பிரச்சனைகள் இன்று நிகழாமல் பார்த்துக் கொள்ள முடியும். எதிரிகள் மூலம் வரும் ஆபத்துக்கள் தானாகவே நீங்கிவிடும். மற்றவர்களுக்கு உதவிகரமான அறிவுரைகளை கூறுவீர்கள்.
பரிகாரம் - அரச மரத்தின் அடியில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.


மகரம்:
பொருளாதார ரீதியாக சில பிரச்சினைகள் இன்று உண்டாகலாம். உங்களுக்கு வர வேண்டிய பணம் வருவதில் சில தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதிருப்தியாக உணர்வீர்கள்.
பரிகாரம் - விஷ்ணு பகவானை வழிபட வேண்டும்.


கும்பம்:
தொழில் அல்லது அலுவலகத்தில் இன்று சில பிரச்சனைகள் உண்டாகலாம். முடிந்த அளவு பொருளாதாரம் சம்பந்தமாக முடிவுகள் எடுக்கும் போது மிகவும் கவனமுடன் இருக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது. கவனக்குறைவாக முடிவுகள் எடுக்கும் பட்சத்தில் தொழிலில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
பரிகாரம் - கிருஷ்ண பகவானை வழிபட வேண்டும்.


மீனம்:
அலுவலகம் செல்பவர்களுக்கு இன்று சற்று சிரமமான நாளாக இருக்கும். மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள். வெளி ஆட்களுடன் பேசும்போது கவனமாக இருப்பது மிகவும் நல்லது.
பரிகாரம் - பிராணயாமத்தை பயிற்சி செய்ய வேண்டும்.

No comments