டீ, காபி குடிக்கும் போது ரஸ்க் சாப்பிடுபவரா நீங்க? இனிமே அந்த தப்பை பண்ணாதீங்க.
டீ அல்லது காபி குடிக்கும் போது அதனுடன் நொறுக்குதீனிகளை வைத்து சாப்பிடுவது அனைவரும் விரும்பும் ஒன்று.
பெரும்பாலும் இந்த நொறுக்குத் தீனியாக இருப்பது ரஸ்க்தான். இந்த மொறுமொறுப்பான ரஸ்க் டீ குடிக்கும் அனைவருக்குமே மிகவும் பிடித்த ஒன்றாகும்.
சுவையான ஆனால் இந்த பாதிப்பில்லாத சிற்றுண்டியை தொடர்ந்து உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தில் சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பது பலரும் அறியாத ஒன்று. பலருக்கும் பிடித்த இந்த சுவையான நொறுக்குத்தீனியை ஏன் டீ, காபியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ரஸ்க் எப்படி செய்யப்படுகிறது?
ரஸ்க் செய்ய, ரொட்டி மாவை வேகவைத்து, துண்டுகளாக்கி, பின்னர் பொன்னிறமாக மிருதுவாக மாறும் வரை மீண்டும் சுட வேண்டும். இரண்டு முறை பேக்கிங் செய்யும் செயல்முறையானது இந்த தின்பண்டங்களை உலர்ந்ததாகவும், மொறுமொறுப்பாகவும், நீண்ட நாள் கெட்டுப்போகாமல் வைத்திருக்கவும் உதவுகிறது. கூடுதலாக, ரஸ்க்குகள் பெரும்பாலும் சர்க்கரை, பால், முட்டை மற்றும் பிற பொருட்களுடன் சுவையூட்டப்படுகின்றன.
வெற்று கலோரிகள்
இந்த ரஸ்க்குகள் பார்ப்பதற்கு கவர்ச்சியானதாக இருந்தாலும் குறைவான ஊட்டச்சத்து மதிப்பை வழங்குவதால், திருப்தியற்றதாகவும், முக்கிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததாகவும் உள்ளது. அவை கலோரிகள் நிறைந்தவை மற்றும் உங்கள் தினசரி கலோரி உட்கொள்ளலை விரைவாக பூர்த்தி செய்யலாம், இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். ஒரு ரஸ்கில் 40-60 கலோரிகள் வரை இருக்கலாம், எனவே இதனை தவிர்ப்பது நல்லது.
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்
ரஸ்க்கில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளது. இத்தகைய சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும், இதனால் நாம் மந்தமாக உணர்கிறோம். ரஸ்க் பொதுவாக சுத்திகரிக்கப்பட்ட மாவில் தயாரிக்கப்படுகிறது, அதாவது அவை உணவு நார்ச்சத்து இல்லாதவை. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யலாம், இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.
புரொட்டின் இல்லாதவை
ரஸ்க்கில் புரோட்டின்கள் இல்லை, இது உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு ஊட்டச்சத்தாகும். புரோட்டின் நிறைந்த பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வது நம்மை முழுமையாக வைத்திருக்கவும், தசை வளர்ச்சியை ஆதரிக்கவும் மற்றும் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தவும் உதவும்.
குறைவான நார்ச்சத்துக்கள்
ரஸ்க்கில் பொதுவாக நார்ச்சத்து குறைவாக இருப்பதால் பசி மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது ஜீரணிக்க கடினமாக இருக்கலாம், மேலும் வீக்கம், வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற இரைப்பை குடல் துன்பத்தை ஏற்படுத்தும்.
ஊட்டச்சத்துக்கள் குறைவு
நமது உடல் சரியாக செயல்பட பலவகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவைப்படும். துரதிர்ஷ்டவசமாக, ரஸ்க் பிஸ்கட்டுகளால் நமது ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது, எனவே ரஸ்க் சாப்பிடுவது உங்களுக்கு எந்த பயனையும் தராது.
No comments