Breaking News

வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்வது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வருமான வரித்துறை வெளியிட்டு உள்ளது:

 

சென்னை: வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்வது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வருமான வரித்துறை வெளியிட்டு உள்ளது.

வருமான வரி கணக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கிக்கொண்டே வருகிறது. ஜூலை மாதம் என்பதால் இந்தியா முழுக்க பலரும் வருமான வரி கணக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்து வருகின்றனர்.

ஜூலை 31 காலக்கெடுவை நீட்டிக்க நிதி அமைச்சகம் பரிசீலிக்காததால், வருமான வரி செலுத்துவோர் விரைவில் கணக்கு தாக்கல் செய்யுமாறு வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை சுமார் 5.83 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு அதை விட அதிக பேர் வருமான வரி தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். பட்ஜெட் 2023-24ன் படி, நடப்பு நிதியாண்டில் 33.61 லட்சம் கோடி ரூபாய் மொத்த வரி வரவு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஒவ்வொரு வருடமும் 10 சதவிகிதம் வரை வரி வருவாய் உயரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறி உள்ளார். இன்னொரு பக்கம் ஆதார் கார்டு - பான் கார்டை இணைக்காதவர்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வது மிக கடினம் ஆகும் என்றும் மத்திய அரசு கூறி உள்ளது.

மெசேஜ்: இந்த நிலையில் வருமான வரி தாக்கல் செய்ய இன்னும் ஒரு வாரமே இருப்பதாக வருமான வரித்துறை மக்களுக்கு மெசேஜ் அனுப்பி வருகிறது. கடந்த வருடம் வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு அவர்களின் ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டு உள்ள போனுக்கு மெசேஜ் அனுப்பி வருகிறது.

வருமான வரி தாக்கல் செய்யும் காலக்கெடு முடிய போகிறது. உடனே தாக்கல் செய்யுங்கள் என்று மெசேஜ் அனுப்பி வருகிறது. நம்மில் சிலர் இப்படி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யும் போது ரீ பண்ட் தொகைக்கான வங்கி கணக்கை பதிவிடும் போது தவறான கணக்கை கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

அது போன்ற சமயத்தில் உங்களின் ரிட்டர்ன்ஸ் "process" அதாவது சோதனைக்கு உட்படுத்தப்படும் முன் அதை உங்களால் மாற்ற முடியும். இதற்காக நீங்கள் பின்வரும் விஷயங்களை செய்ய வேண்டும்.

பக்கத்தின் மேல் இடது புறத்தில் அமைந்துள்ள 'எனது கணக்கு' பக்கத்திற்கு செல்லவும்.

'எனது கணக்கு' பக்கத்தின் கீழ், 'சேவை கோரிக்கை அதாவது service request' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

'சேவை கோரிக்கை' என்பதன் கீழ், 'request type' என்பதை 'new request' என தேர்வு செய்யவும்.

அடுத்து, 'கோரிக்கை வகை' என்பதன் கீழ், - 'ஐடிஆர் படிவ விவரங்களை மாற்று' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

பின்னர் 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒரு புதிய திரையில் 'ஐடிஆர் படிவ விவரங்களை மாற்று' என்று காட்டப்படும்.

வரி செலுத்துவோரின் PAN காட்டப்படும்.

வரி செலுத்துவோர் ITR இன் 'ஒப்புகை எண்ணை' இங்கே உள்ளிட வேண்டும்.

அடுத்த திரையில், வரி செலுத்துபவருக்கு 'வங்கி கணக்கு விவரங்களை மாற்றுதல்', 'முகவரி விவரங்களை மாற்றுதல்' மற்றும் 'மின்னஞ்சல் ஐடி/மொபைல் எண் விவரங்களை மாற்று' ஆகிய விருப்பங்கள் உள்ளன.

இங்கே, வரி செலுத்துவோர் தேவையான விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும், தேவையான தகவலை வழங்க வேண்டும் மற்றும் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

ஐடிஆர் படிவ விவரங்களை மாற்றுவதற்கான உங்கள் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், பரிவர்த்தனை ஐடியுடன் வெற்றிச் செய்தி திரையில் காண்பிக்கப்படும்.

'இ-ஃபைலிங்' போர்ட்டலில் உள்நுழையவும் https://www.incometax.gov.in/iec/foportal/

பக்கத்தின் மேல் இடது புறத்தில் அமைந்துள்ள 'எனது கணக்கு' தாவலுக்குச் செல்லவும்.

'எனது கணக்கு' தாவலின் கீழ், 'சேவை கோரிக்கை' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

'சேவை கோரிக்கை' என்பதன் கீழ், 'கோரிக்கை வகை' என்பதை 'புதிய கோரிக்கை' என தேர்வு செய்யவும்.

அடுத்து, 'கோரிக்கை வகை' என்பதன் கீழ், - 'ஐடிஆர் படிவ விவரங்களை மாற்று - Change ITR Form Particulars' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

பின்னர் 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும்.

பின் ஒரு புதிய திரையில் 'ஐடிஆர் படிவ விவரங்களை மாற்று' என்று காட்டப்படும்.

வரி செலுத்துவோரின் PAN காட்டப்படும்.

வரி செலுத்துவோர் ITR இன் 'ஒப்புகை எண்ணை' இங்கே உள்ளிட வேண்டும்.

அடுத்த திரையில், வரி செலுத்துபவருக்கு 'வங்கி கணக்கு விவரங்களை மாற்றுதல்', 'முகவரி விவரங்களை மாற்றுதல்' மற்றும் 'மின்னஞ்சல் ஐடி/மொபைல் எண் விவரங்களை மாற்று' ஆகிய தேர்வுகள் இருக்கும்.

இங்கே, வரி செலுத்துவோர் தேவையான விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இங்கே வங்கி கணக்கை நீங்கள் தேர்வு செய்யலாம். தேவையான தகவலை மாற்றுவதற்காக வழங்க வேண்டும் அதன்பின் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

ஐடிஆர் படிவ விவரங்களை மாற்றுவதற்கான உங்கள் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், பரிவர்த்தனை ஐடியுடன் done என்ற தகவல்கள் செய்தி திரையில் காண்பிக்கப்படும்.

உங்கள் வங்கி விவரங்களைப் புதுப்பித்தவுடன், உங்கள் ஐடிஆரை மீண்டும் சரிபார்த்து ரீ வேலிடேட் செய்ய வேண்டும்.


No comments