Breaking News

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.07.23

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.07.23

திருக்குறள் :
பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஈகை

குறள் :221

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

விளக்கம்:

இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

பழமொழி :
After a dinner sleep a while

உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.


இரண்டொழுக்க பண்புகள் :

1. எல்லாம் தெரியும் என்று சொல்பவனின் தேடலும் அறிவும் விரைவில் முடிவுக்கு வரும்.

2. இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் எனக்கு அதிகம் தெரியாது என்று சொல்பவர்கள் தேடுதலும் அறிவும் தொடரும்

பொன்மொழி :

ஒரு புத்திசாலி பிரச்சினையைத் தீர்க்கிறான். ஞானமுள்ளவன் அதைத் தவிர்க்கிறான். --ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்


பொது அறிவு :

1. எகிப்தின் தலைநகர் எது?

விடை: கெய்ரோ

2. பரப்பளவில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது?

விடை: ராஜஸ்தான்


English words & meanings :

 overseas - going to a foreign country especially across the sea, கடல் கடந்த வெளி நாட்டு பயணம் செய்வது. pamper – give more attention and comfort to a person, செல்லம் கொடுப்பது.


ஆரோக்ய வாழ்வு :

கருணை கிழங்கு,அதீத உடல் எடை கூடுவது உடல் நலத்திற்கு பல பாதிப்புகளை உண்டாக்கும். உடல் எடை குறைய சரியான ஆரோக்கியமான உணவு உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். கருணை கிழங்கு உடல் எடை குறைக்க சிறப்பாக உதவுகிறது.


நீதிக்கதை

ஒற்றுமையே வலிமை
வயது முதிர்ந்த விவசாயி ஒருவருக்கு  நான்கு மக்கள் இருந்தனர். அந்த நால்வரும் ஒற்றுமை இல்லாமல், எப்பொழுதும் சண்டையும் சச்சரவுமாக இருந்தனர்.
இவர்கள் இப்படியே இருந்தால், குடும்பம் சிதறிப் போகுமே என்று வருந்தினார் வயதான தந்தை.
அவர் கூறிய புத்திமதிகளை மதிக்காமல் திரிந்தனர்.
ஒருநாள் மக்கள் நால்வரையும் அழைத்தார் தந்தை அவர்கள் வந்து கட்டிலைச் சுற்றி நின்றனர்.
தன் காலடியில் கிடந்த மூங்கில் கட்டு ஒன்றை மூத்த மகனிடம் கொடுத்து, “இதை முறி” என்றார்.

தன் பலம் முழுவதையும் பயன்படுத்தினான். ஆனால், முறிக்க முடியவில்லை.

அடுத்து இரண்டாவது மகன், மூன்றாவது மகன், நான்காவது மகன், மூவரும் முயன்று பார்த்தனர், ஒருவராலும் முறிக்க இயலவில்லை.

பிறகு, கட்டைப் பிரித்து ஆளுக்கு ஒரு குச்சியைக் கொடுத்தார்.

நால்வரும் சுலபமாக முறித்து விட்டு நின்றனர்.

“இப்படித்தான் உங்கள் வாழ்க்கையும் அமையும், நீங்கள் நால்வரும் ஒற்றுமையாக இருப்பீர்களானால், உங்கள் வாழ்க்கை உறுதியாக விளங்கும். எவரும் உங்களை ஏமாற்ற முடியாது. சண்டைசச்சரவு செய்து, தனித்தனியாக ஆளுக்கு ஒரு பக்கமாக இருப்பீர்களானால், சிதறிப் போவீர்கள். ஒற்றுமையே வலிமை அளிக்கும்” என்றார் தந்தை.


இன்றைய செய்திகள் - 21.07. 2023

*இரயிலில் பொதுப்பெட்டி பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவு குடிநீர் வழங்க ஏற்பாடு - இரயில்வே துறை.

*குறைந்த வருமானம் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏசி அல்லாத சிறப்பு ரயில்கள் -  இரயில்வே துறை திட்டம்.

*கேரளா, தெலுங்கானா, குஜராத், ஒடிசா உயர் நீதிமன்றங்களுக்கு நான்கு தலைமை நீதிபதிகள் நியமனம்.

*ஆஷஸ் நான்காவது டெஸ்ட் - ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்.

*தேசிய டைவிங் - வாட்டர் போலோ : சென்னை வீராங்கனைக்கு வெள்ளி பதக்கம்.

Today's Headlines

 *Arrangement to provide food and drinking water at low cost to general coach passengers in trains - Railway Department.

 *Non-AC Special Trains for Low Income Migrant Workers - Railway Department Scheme.

 * Appointment of four Chief Justices to High Courts of Kerala, Telangana, Gujarat and Odisha.

 *Ashes Fourth Test - Australia all out for 317 in first innings.

 *National Diving - Water Polo: Silver medal for Chennai player.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments