Breaking News

மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம்... B.Ed படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு... உடனே அப்ளை பண்ணுங்க..!

 

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் வரும் 33 வட்டார கல்வி அலுவலர் காலி பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளை மறுநாளுடன் (05-07-2023) முடிவடைகிறது.
ஆள்சேர்க்கை அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

கல்வித் தகுதி: பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் தொடர்புடைய இளங்கலை கல்வியியல் பட்டம் பெற்றிருக்க (Any Degree with B.Ed. Degree ) வேண்டும்.

வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 1.7. 2023 அன்று 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் (5 ஆண்டுகள்), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் 5 ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர் www.trb.tn.gov.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் மூலம் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.

தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட அன்றோ அல்லது அதற்கு பிறகோ எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணைய வழியில் விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர் தங்களுடைய டிஜிட்டல் வடிவிலான கையெழுத்தை தவறாமல் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.

மாத சம்பளம்: 36,900- 1,16,600 வரை

முக்கியமான நாட்கள்:

ஆள்சேர்க்கை அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள்: 05.06.2023

இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 06-06-2023 முதல் 05.07.2023 வரை

தேர்வு நடைபெறும் நாள் : 10.09.2023


விண்ணப்பக் கட்டணம்: தேர்வுக் கட்டணமாக ரூபாய் 600/-நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் எஸ்.சி.எஸ்.டி, வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் ரூ.300-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை, பதிவிறக்கம்செய்து வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

No comments