Breaking News

EMI-ல் ஏ.சி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்கினால் லாபமா, நஷ்டமா?

 

ன்றைக்கு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உயிர் மூச்சாக இருக்கிறது இ.எம்.ஐ., ஈக்வேட்டட் மந்த்லி இன்ஸ்டால்மென்ட் என்பதன் சுருக்கம்தான் இ.எம்.ஐ.

வீட்டுக்குத் தேவையான ஏ.சி வாங்கவேண்டுமா? நேராக கடைக்குச் சென்று பிடித்த ஏ.சி.யை வாங்கவேண்டியதுதான். பொருளுக்கான பணத்தைக் கட்டப்போகிற வழியிலேயே கடன் தரும் நிறுவனங்கள் உங்களுக்காக காத்திருக்கும். ஒரே ஒரு கையெழுத்து மட்டும் போட்டால், ஏ.சி.யை வீட்டுக்குக் கொண்டுவந்து, இதமான குளிரின் சுகத்தை அனுபவிக்கத் தொடங்கிவிடலாம்!

AC - representational imageஎந்தக் கடனை முதலில் அடைக்க வேண்டும்? பர்சனல் ஃபைனான்ஸ் பக்கா விதிமுறை..!

இப்படித்தான் இன்றைய மிடில் கிளாஸ் வர்க்கம் வீட்டுக்குத் தேவையான பிரிட்ஜ், வாஷிங்க்மெஷின், டி.வி, இரு சக்கர வாகனங்கள், கார் என எல்லாவற்றையும் இ.எம்.ஐ.யிலேயே வாங்கி 'பெர்மனன்ட் கடன்காரர்' என்கிற பட்டத்தை சுமந்துகொண்டு வாழ்ந்து வருகிறது.

ஏன் இப்படி வாங்குகிறார்கள்?

''வீட்டுக்கு நிறைய பொருள்கள் தேவைப்படுகிறது. இந்த பொருள்களை உடனடியாக வாங்க வேண்டும் எனில், கையில் பணம் இருப்பதில்லை. எனவே, வேறு வழி இல்லாமல் கடன் வாங்கித்தான் இந்தப் பொருள்களை வாங்க வேண்டியிருக்கிறது. இதில் இ.எம்.ஐ வாங்கும்போது மாதந்தோறும் கட்டியாக வேண்டிய ஒரு கமிட்மென்ட் வந்துவிடுகிறது. எனவே, மாதந்தோறும் 2000-மோ, 3,000-மோ கட்டிமுடித்துவிடுகிறோம். பல்லைக் கடித்து இப்படி சில வருஷம் பணம் கட்டிவிடுவதால், அந்தப் பொருளும் நமக்கு சொந்தமாகிவிடுகிறது. எனவேதான், இ.எம்.ஐ-யில் பல பொருள்களை வாங்குகிறோம்'' என்கிறார்கள் ஏழை மக்கள்.

ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்களால் பணம் சேர்த்தபின் பொருள்களை வாங்க முடிவதில்லை. ஆரம்பத்தில் இருந்தே கறாரான சேமிப்புப் பழக்கம் இல்லாததால், திடீர் திடீரென்று வரும் செலவுகளை சமாளிக்க கையில் இருக்கும் பணத்தைச் செலவு செய்துவிடுகிறார்கள். பெரிய அளவில் சேமிப்பு எதுவும் இல்லாததால், இ.எம்.ஐ-யில்தான் பொருள்களை வாங்கவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

சரி, இ.எம்.ஐ.யில் பொருள்களை வாங்குவது தவறா? நிச்சயம் தவறல்ல. ஆரம்பத்தில் மிக மிக குறைவான சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும்போது, வீட்டுக்குத் தேவையான ஒரு பொருள் திடீரென்று கட்டாயமாகத் தேவைப்படும்போது, அந்தப் பொருளை கடனில் வாங்கி, கடன் பணத்தை இ.எம்.ஐ முறையில் கட்டுவதில் தவறே இல்லை.

ஆனால், அடுத்தடுத்து பல பொருள்களை இ.எம்.ஐ முறையில் வாங்கும்போதுதான் அது தவறான விஷயமாக மாறிவிடுகிறது. அதாவது, இ.எம்.ஐ -யில் ஒரு பொருளை வாங்கும்போது அதற்காக கட்டும் வட்டி அதிகமாக இருக்கிறது. இதனால், கணிசமான பணம் நமக்கு இழப்பு ஏற்படுகிறது.

உதாரணமாக, ரூ.50,000 மதிப்பிலான ஒரு பொருளை நீங்கள் இ.எம்.ஐ.யில் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு குறைந்தபட்சமாக 12% முதல் 14% வரை வட்டி வசூலிப்பார்கள். மூன்று ஆண்டு காலத்தில் ரூ.50,000-த்தை நீங்கள் கட்டிமுடிக்க வேண்டும் எனில், நீங்கள் எவ்வளவு திரும்பக் கட்டவேண்டியிருக்கும் தெரியுமா?

மாதந்தோறும் ரூ.1,972 வீதம் 36 மாதங்களுக்குக் கட்ட வேண்டியிருக்கும்! அதாவது, ரூ.50,000 அசல் பணத்தைத் திரும்பக் கட்ட நீங்கள் ரூ.21,000 வட்டி கட்டியிருப்பீர்கள். அசல் ரூ.50,000, வட்டி ரூ.21,000 என மொத்தம் ரூ.71,000 கட்டியிருப்பீர்கள்.

ரூ.50,000 கடனுக்கு 14% வட்டியில் நீங்கள் திரும்பக் கட்டியதாகத்தான் உங்களுக்குக் கடன் தந்தவர்கள் கணக்கு காட்டுவார்கள். ஆனால், உள்ளபடி பார்த்தால், அது 24.40% என்கிற அளவுக்கு வட்டி வரும். ஏறக்குறைய 25% வட்டித்தான் இந்தப் பொருளை வாங்குகிறோம்.

 interestகிரெடிட் கார்டை எப்படி பயன்படுத்த வேண்டும்..? பர்சனல் ஃபைனான்ஸ் பக்கா விதிமுறை..!

ரூ.50,000 மதிப்பில் உள்ள பொருளை வாங்கவே நீங்கள் ரூ.21,000 வட்டி கட்டவேண்டும் எனில், இது மாதிரி நான்கு முறை நீங்கள் செய்தால், ரூ.80,000 நீங்கள் வட்டி கட்டியிருப்பீர்கள்.

ஆனால், நீங்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டாவது பணம் சேர்த்து பொருள்களை வாங்கி இருந்தால், குறைந்தபட்சம் ரூ.21,000 முதல் அதிகபட்சம் ரூ.84,000 வரை வட்டி கட்டியிருப்பீர்கள்.

இப்படி வட்டி கட்டுவதன்மூலம் நாம் இழக்கும் பணம் பற்றிய கணக்கை நமக்கு யாருமே சொல்லித் தருவதில்லை. அதனால்தான் இந்த அளவுக்கு பணத்தை இழந்துகொண்டிருக்கிறோம்.

இனியாவது இ.எம்.ஐ.யில் பொருள் வாங்கவேண்டியது அவசியம்தானா என ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுங்கள். அவசியம் இல்லாத ஒரு பொருளைத்தான் இ.எம்.ஐ மூலம் வாங்கப் போகிறோம் எனில், முடிந்த வரை அதை செய்யாமலே இருப்பது நல்லது!

No comments