Breaking News

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.07.23

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.07.23

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஒப்புரவறிதல்

குறள் :216

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.

விளக்கம்:

பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.

பழமொழி :
A tree is known by its fruit

நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உதவி செய்வது பிறரின் வருத்தம் போக்கவே தவிர பிறர் என்னைப் புகழ அல்ல. 

2. என்னால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்வேன்.

பொன்மொழி :

உன் பிள்ளை ஊனமாய் பிறந்தால் சொத்து சேர்த்து வை. சொத்து சேர்த்து பிள்ளையை ஊனமாக்காதே

காமராஜர்

பொது அறிவு :

1.காமராஜர் எந்த வகுப்பு வரை படித்திருக்கிறார்? 

ஆறாம் வகுப்பு 

2. தமிழக முதல்வராக காமராஜர் பதவி ஏற்ற ஆண்டு? 

1954

English words & meanings :

 egoism - selfishness சுயநலம்; farrier - a veterinary doctor கால்நடை மருத்துவர்


ஆரோக்ய வாழ்வு :

வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வாழைப்பழத்தில் இருப்பதை விட பொட்டாசியம் சத்து அதிகமாக இருக்கும். பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும். உடலில் இருந்து கூடுதல் சோடியத்தை அகற்றவும் வழிவகை செய்யும். இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

ஜூலை 15 இன்று

காமராசர்  அவர்களின் பிறந்த நாள்

காமராசர் (காமராஜர்) (K. Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆவார். இவர் ஒன்பது ஆண்டுகள் சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நீதிக்கதை

நாட்டை ஆளும் அரசன் ஒருவனிடத்தில், அந்த நாட்டின் சிற்பி நான்கு பொம்மைகளை கொண்டு வந்து தருகிறார்.

அரசன் கோபமாக " நான் என்ன சின்னக் குழந்தையா?  இதை வைத்து விளையாடுவதற்கு" என்றுக் கேட்கிறார்.
சிற்பி "இல்லை அரசே, இது நம் வருங்கால ராஜாவுக்கு அதாவது நம் இளவரசருக்கு" என்கிறார்.

"இந்த பொம்மைகளில் சில விசேஷங்கள் உண்டு.நான்கு பொம்மைகளின் ஒரு பக்க காதிலும் ஓட்டை இருக்கிறது பாருங்கள்" என்கிறார்.

அரசன் "இதில் என்ன விஷயம் இருக்கிறது" என்கிறார்.

முதல் பொம்மையை அரசனிடம் கொடுக்கிறார் சிற்பி.கூடவே ஒரு மெல்லிய சங்கிலியையும் கொடுத்து அதன் காதில் இருக்கும் ஓட்டையில் விடச் சொல்கிறார்.

சங்கிலி மறுப்பக்க காதின் வழியே வருகிறது.

சிற்பி "மனிதர்களில் சிலர் நாம் எதைச் சொன்னாலும் இப்படித் தான் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதின் வழியே அனுப்பி விடுவார்கள்" என்கிறார்.

இரண்டாவது பொம்மையை கொடுத்து அதையே திருப்பிச் செய்யச் சொல்கிறார்.

இந்த பொம்மையில் சங்கிலி வாய் வழியே வருகிறது.

இந்த மாறி மனிதர்கள் எதை சொன்னாலும் அதை அடுத்த நொடி வெளியே விட்டு பரப்பிவிடுவார்கள் என்கிறார்.

பிறகு, மூன்றாவது பொம்மையை கொடுத்து மீண்டும் அதையே செய்யச் சொல்கிறார்.

இதில், சங்கிலி வெளியே வரவே இல்லை.

சிற்பி, இவர்களிடம் எதைச் சொன்னாலும் உள்ளேயே தான் இருக்கும்.வெளியே வராது என்கிறார்.

அப்போது இதில் "யார் தான் சிறந்த மனிதர் என்று" அரசன் கேட்கிறார்.

என் கையில் இருக்கும் இந்த நான்காவது பொம்மை தான் சிறந்த மனிதன் என்று சிற்பி சொல்கிறார்.

அரசன் பொம்மையின் காதின் வழியே சங்கிலியை விடுகிறார். மறுபக்க காதின் வழியே வெளிவருகிறது. சிற்பி மீண்டும் செய்ய சொல்கிறார்.இரண்டாம் முறை வாயின் வழியே சங்கிலி வருகிறது.மூன்றாம் முறை வரவே இல்லை.


சிற்பி "நான்காவது பொம்மை போன்ற மனிதர்கள் தான் வாழ்வில் உயர முடியும். கேட்பவற்றில் நல்லவைகளை மாத்திரம் மனதில் வைத்துக் கொண்டு தேவையற்றவைகளை விட்டுவிட வேண்டும். நல்லவைகளை மாத்திரம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.இதனை இளவரசர் கற்றுக்கொள்ள வேண்டும் என்றே இந்த பொம்மைகளை தருகிறேன்" என்றார். அரசனும் சிற்பிக்கு நன்றி கூறினார்.


இன்றைய செய்திகள் - 15.07. 2023

*ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திராயன்-3 விண்கலம் தரையிறங்கும் என எதிர்பார்ப்பு. 7 ஆய்வுக்கருவிகளை உள்ளடக்கிய இந்த விண்கலம் நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது.

*ஏழை மக்களின் மருத்துவ செலவை பாதியாக குறைக்க 'மக்களை தேடி மருத்துவம்' திட்டம் - முதலமைச்சர் பெருமிதம்.

*மதுரையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று திறப்பு.

*பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைய இருப்பது இந்தியாவிற்கே பெருமை.  
பிரான்ஸ் வாழ் இந்தியர்களிடையே பேசிய பிரதமர் மோடி பெருமிதம்.

*ஆசிய தடகளப் போட்டியில் ஒரே நாளில் இந்தியாவிற்கு மூன்று தங்க பதக்கம்.

*அமெரிக்க ஓபன் பேட்மிட்டன் பி.வி.சிந்து - லக்ஷயா சிங் கால் இறுதிக்கு தகுதி. தமிழக வீரர் சங்கர் முத்துசாமி இஸ்ரேலின் ஜில்பர் மேனை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.


Today's Headlines

* Chandrayaan-3 is expected to land on August 23.  The spacecraft, which includes 7 probes, has been sent to explore the southern part of the Moon.

 * To halve the medical expenses of the poor people, 'Medicine in search of people' - Chief Minister Perumidham.

 * The artist's centenary library, which has been built on a grand scale in Madurai, will be inaugurated today.

 * It is India's pride to have a statue of Thiruvalluvar in France.
 Prime Minister Modi spoke with pride among Indians living in France.

 *Three gold medals for India in a single day at the Asian Athletics Championships.

 *US Open Badminton PV Sindhu - Lakshya Singh qualify for quarter-finals.  Tamil Nadu's Shankar Muthuswamy defeated Israel's Gilber Man to qualify for the quarter-finals.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Recommanded News

No comments