நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!! அதிரடி அறிவிப்பு!! நாகப்பட்டினம் மாவட்டத்தில்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள சிக்கல் சிங்காரவேலர் ஆலயம் உலக பிரசித்தி பெற்றது.தமிழ் கடவுளான முருகன் ஆலயங்களில் இந்த ஆலயம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முருகன் இந்த ஆலயத்தில் தான் தனது அன்னையின் வேல் வாங்கி போருக்கு புறப்பட்டதாக வரலாறு. பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் நாளை ஜூலை 5 ம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு நடக்கிறது. குடமுழுக்கு தினத்தில் சிவபெருமான், முருகன், பெருமாள் அனைவருக்கும் ஒரே மேடையில் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தால் விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செய்திக்குறிப்பு ஒன்ற வெளியிட்டுள்ளார்.
அதில் நாகை தாலுகா சிக்கலில் உள்ள சிங்காரவேலவர் கோவில் குடமுழுக்கு ஜூலை 5ம் தேதி நடைபெறுவதை ஒட்டி இந்த விழாவில் கலந்து கொள்ள உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இதன் அடிப்படையில் நாகை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஜூலை 5ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜூலை 8ம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு பணிநாளாக செயல்படும் என அறிவித்துள்ளார்.
No comments