அரசு ஊழியர்களுக்கு ஸ்வீட் நியூஸ்.. திடீரென டபுள் ஜாக்பாட்.. இது லிஸ்ட்லயே இல்லையே.. சபாஷ் மத்திய அரசு
ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வுக்காக மத்திய அரசு ஊழியர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், புது அதிரடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெரும்பாலான வேலைகள் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டு வருகிறது. அதனால்தான், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் இன்றைக்கு தவிர்க்க முடியாததாகிவிட்டது.
சலுகை: அந்தவகையில், ஒரு சலுகை தற்போது வழங்கப்பட்டுள்ளது.. கடந்த 2020 ம்ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு இதே போல ஒரு சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது.. இப்போதும் ஒரு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் பட்டியலிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், "மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் துணை செயலாளர்கள் அந்தஸ்தில் உள்ளவர்கள் மின்னணு சாதனங்களை பெற உரிமையுடையவர்கள் ஆவார்கள். அதன்படி மத்திய அரசு அதிகாரிகள் 1.3 லட்சம் வரையிலான மொபைல், லேப்டாப் அல்லது அதுபோன்ற சாதனங்களை வாங்கி கொள்ளலாம்.
மேக்-இன் இந்தியா: இருந்தாலும், 40 சதவீதத்திற்கும் அதிகமான மேக்-இன்-இந்தியாவை கொண்ட சாதனங்களுக்கு, விலை உச்சவரம்பு ரூ. 1.30 லட்சம் மற்றும் வரிகளாக இருக்கும்.
ஒரு அமைச்சகம் மற்றும் துறையில் ஏற்கனவே ஒரு சாதனம் ஒதுக்கப்பட்ட அதிகாரிக்கு 4 வருடங்கள் வரை புதிய சாதனங்கள் எதுவும் அனுமதிக்கப்படக்கூடாது.. 4 வருடம் பயன்பாடு முடிந்த பிறகு, அதிகாரி குறிப்பிட்ட அந்த சாதனத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு, சாதனத்தில் உள்ள தரவு முற்றிலும் அழிக்கப்பட்டதை சம்பந்தப்பட்ட துறை உறுதிசெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டபுள் ஜாக்பாட்: 1.3 லட்சம் வரையிலான லேப்டாப் மற்றும் மொபைல் போன்கள் போன்ற மின்னணு சாதனங்களை பெறும் வாய்ப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அது பெரிதும் வரவேற்பினை பெற்று வருகிறது. அத்துடன், 4 வருடங்களுக்கு பிறகு அந்த அதிகாரி தனக்கு வழங்கப்பட்ட சாதனத்தை தனதாக்கி கொள்ளலாம் என்று கூறியிருப்பது, இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
No comments