Breaking News

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.07.23


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.07.23

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்:தீவினையச்சம்

குறள் :207

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.

விளக்கம்:

எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.


பழமொழி :
A little string will tie a little bird

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே ஊக்கமுடன் எனது வேலைகளை செய்வேன்.

 2. முயன்றால் பட்டாம்பூச்சி. இல்லாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்.


பொன்மொழி :

இன்னும் எவ்வளவு தொலைவு இருக்கிறது என பார்ப்பதைவிட எப்போதும், எவ்வளவு தொலைவு கடந்து வந்திருக்கிறீர்கள் என பாருங்கள். இந்த வேறுபாடு எத்தனை எளிதானது என்பது உங்களை வியப்பில் ஆழ்த்தும்”- ஹெய்டி ஜான்சன்.


பொது அறிவு :

1. நோபல் பரிசை வென்ற முதல் இந்தியர் யார்?


விடை: ரவீந்திரநாத் தாகூர்.

2. டெல்லியில் செங்கோட்டையை கட்டிய முகலாய பேரரசர் யார்?


விடை: ஷாஜகான்.


English words & meanings :

 nostril - nose passage மூக்குத் துளை; odorous - sweet smelling நறுமணம்


ஆரோக்ய வாழ்வு :

மரவள்ளிக்கிழங்கு :கிழங்கில் உள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கல், குடல் புற்றுநோய், குடல் வலி போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.


ஜூலை 04  இன்று

மேரி க்யூரி அவர்களின் நினைவுநாள்

மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Salomea Skłodowska-Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934[1]) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903[2], 1911[3] ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்


நீதிக்கதை

இரண்டு மரம்!

ஒரு ஆற்றங்கரையில் இரண்டு பெரிய மரம் இருந்தது. அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி, மரத்திடம் கேட்டது. 'மழை காலம் தொடங்க இருப்பதால், நானும் என் குஞ்சிகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க

முடியுமா? 'என்றது. முதலில் இருந்த மரம் முடியாது என்றது. அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது.
ுருவி கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம், அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது. தண்ணீரில் இழுத்து செல்லும் பொழுது குருவி சிரித்து கொண்டே சொன்னது, "எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லப்படுகிறாய்' என்றது.

அதற்கு மரம் கூறிய பதில்

'எனக்கு தெரியும் நான் வலுவிழந்து  விட்டேன். எப்படியும் இந்த மழைக்கு நான் தாங்க மாட்டேன். தண்ணீரில் அடித்து செல்லபடுவேன். நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் உனக்கு இடம் இல்லை என்றேன்," மன்னித்து விடு என்றது.


உங்களை யாரும் நிராகரித்தால் அவர்களை தவறாக நினைக்காதீர்கள்


இன்றைய செய்திகள் - 04.07. 2023

*"மேதாது அணைக்கட்டும் முயற்சியை நீதிமன்றம் மூலம் தமிழ்நாடு அரசு முறியடிக்கும்" என அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்.

*சென்னையில் இன்று முதல் மொத்தம் 82 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை என அமைச்சர் பெரிய கருப்பன் அறிவிப்பு.

*கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் வருகை அதிகரிப்பு.

*இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை முன்னேறியதாக வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் 3 நாட்களுக்கு  கன மழைக்கு வாய்ப்பு.

*வங்கதேச கிரிக்கெட் தொடர்-  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு.

*கோவையில் தென்னிந்திய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கூடைப்பந்து போட்டி - தமிழ்நாடு முதலிடம்.

Today's Headlines

* Minister Duraimurugan's plan as "The Tamil Nadu government will defeat the Megadatu dam's attempt through the court".

 *Minister Periya Karuppan has announced that tomatoes will be sold in a total of 82 fair price shops in Chennai from today.

 *Due to the increase in the spread of fever in Cuddalore district for the past few days, there has been an increased i number of patients visiting the government hospital.

 *Meteorological Center informs that Southwest Monsoon has advanced across India.  Chance of heavy rain for 3 days in Tamil Nadu.

 * Indian Women's Cricket Team were Announced for Bangladesh Cricket Series

 *Tamilnadu Tops In South Indian Level Basketball Tournament for Disabled in Coimbatore .
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments