Breaking News

நவகிரங்களை எப்படி வழிபட வேண்டும்?; எந்நாளில் வழிப்பட்டால் என்னென்ன பலன்கள்?

கோயில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு கோயில் கோபுரத்தை எப்படி வழிபட வேண்டும், நுழை வாயிலை எப்படி வழிபட வேண்டும், கொடிமரம், பலிபீடம், பிரகாரம், சண்டிகேஸ்வரர், நவக்கிரகம் என்று ஒவ்வொன்றையும் எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்து அறிந்திருப்பதில்லை.

நவகிரகங்களை வழிபடும் போது சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு. சுக்கிரன், சனி ஆகிய 7 கிரகங்களை இடமிருந்து வலமாக சுற்ற வேண்டும் என்றும், ராகு கேதுவை வலமிருந்து இடமாக சுற்ற வேண்டும் என்றும் பலரும் நினைக்கின்றனர். இப்படி சுற்றலாமா? என்பதில் சந்தேகமும் இருக்கிறது.

நவகிரகங்கள் இருப்பதை எந்தவித நாகரீக வளர்ச்சியும் இல்லாத அந்த காலத்திலேயே கணிக்கப்பட்டு கூறியுள்ளனர். அதேப்போல் நவகிரகங்கள் இருக்கும் நிலையை வைத்தே ஒரு மனிதன் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ போகிறான்? என்று துல்லியமாக கணித்து விடுபவர்களும் உண்டு. அப்படிப்பட்ட இந்த நவகிரகங்களை எந்தெந்த கிழமையில் வழிபடுவது? எந்தெந்த நன்மைகளை கொடுக்கக் கூடியது? என்பதை நாம் தெரிந்து கொள்ளப்போகிறோம். வழிபாடு நவகிரக வழிப்பாடு எவ்வளவு முக்கியம் என்பதை பலரும் அறிவதில்லை.

பிரச்சனைக்கு உரிய கிரகங்களை வழிபட்டால் பிரச்சனைக்கு விரைவான நிவாரணம் கண்டுவிடலாம். உங்கள் சுய ஜாதகத்தை ஆராயும் பொழுது எந்த கிரகங்களால் உங்களுக்கு இப்போது இருக்கும் பிரச்சனை நிகழ்ந்து கொண்டிருக்கிறது? என்பதை தெரிந்து கொண்டால், அந்த கிரகத்திற்கு உரிய முறையில் வழிபட்டால் உடனே நிவாரணம் காணலாம்.

நவ கிரகத்தில் முதல் கிரகமாக இருக்கும் சூரியன் ரொம்பவே வலுவான ஒரு கிரகம் ஆகும். நவ கிரகத்தில் முதல் கிரகமாக இருக்கும் சூரியன் ரொம்பவே வலுவான ஒரு கிரகம் ஆகும். பொதுவாக நவகிரகங்களை 9 முறை சுற்றினாலே போதுமானது. எல்லா தெய்வங்களை வணங்கிய பிறகு தான் கடைசியாக நவகிரகங்களை சுற்றி வர வேண்டும். எந்த கிரகத்தையும் கையால் தொட்டு வணங்க கூடாது என்பது ஐதீகம்.

திங்கள் வழிபாடு:சந்திர பகவானை திங்கட்கிழமை தோறும் வழிபட்டு வருபவர்களுக்கு எல்லா புகழும் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கோவிலுக்கு சென்றால் திங்கட் கிழமையில் நவகிரகத்தில் சந்திரனுக்கு உரிய வஸ்திரத்தை சாற்றி, சந்திர பகவான் மந்திரங்களை உச்சரித்து அவரை வழிபட்டு வந்தால் மனதில் இருக்கும் சஞ்சலங்கள் நீங்கி மனம் ஒருமுகப்படும்.

செவ்வாய் வழிபாடு: இந்த நாளில் செவ்வாய் பகவானை வழிபட்டு வருபவர்களுக்கு தைரியம் அதிகரிக்கும். நம்மை சுற்றி இருக்கும் எத்தகைய பகைவர்களையும் எதிர்கொள்ளும் தைரியம் பிறக்க செவ்வாய் பகவானை, செவ்வாய்க் கிழமையில் சென்று வழிபடுவது சிறப்பு. திருமண தடைகள் அகலவும், சொந்த வீடு அமையவும் வழிபட வேண்டிய கிரகம் செவ்வாய் பகவான் ஆகும்.

புதன் கிழமை வழிபாடு:இந்நாளில் புதன் பகவானை வழிபட்டு வந்தால் நல்ல அறிவாற்றலும் பெருகும். கல்வி கற்கும் மாணவர்கள் கண்டிப்பாக புதன் கிழமையில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி வழிபட்டு வந்தால் படித்தது மறந்து போகாது. அது மட்டுமின்றி அவர்களுக்கு படிக்கும் பொழுது கவனம் சிதறாமல் மனம் ஒருமுகப்படும்.

வியாழக்கிழமை: வழிபாடு வியாழன் அன்று குரு பகவானை வழிபட்டு வருபவர்களுக்கு குழந்தை பாக்கியமும், செல்வ செழிப்பும் ஏற்படும். நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் தொடர்ந்து வியாழக்கிழமையில் குரு வழிபாடு செய்து வர நல்ல பலன் கிடைக்கும். நல்ல செல்வச் செழிப்பிற்கு குரு அருள் தேவை, எனவே குரு பகவான் அருளைப் பெற்றால் கோடீஸ்வரன் ஆகலாம்.

வெள்ளிக்கிழமை வழிபாடு:இந்நாளில் சுக்கிர பகவானை வழிபட்டு வர எல்லா நன்மைகளும் கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளவும் சுக்கிர பகவானை வழிபட வேண்டும். நல்ல மனைவி அல்லது நல்ல கணவன், வீடு, மனை, சொத்துக்கள் போன்ற சுகபோக வாழ்க்கைக்கு தேவையான அத்தனை சம்பத்துக்களையும் பெறுவதற்கு சுக்கிர வழிபாடு செய்து வருவது நல்லது.

சனிக்கிழமை:சனி நாளில் சனி பகவான் வழிபாடு செய்துவர ஆயுள் பலம் பெருகும். நீண்ட ஆயுளுக்கு சனிக்கிழமையில் சனிபகவான் வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். அடுத்து, நாம் செய்யும் பாவத்திற்கு ஏற்ப தண்டனையையும், புண்ணியத்திற்கு ஏற்ப அதிர்ஷ்டத்தையும் கொடுக்கக்கூடிய சனிபகவான் வழிபாடு சனிக்கிழமையில் தொடர்ந்து மேற்கொள்வது நலம் தரும்.

The post நவகிரங்களை எப்படி வழிபட வேண்டும்?; எந்நாளில் வழிப்பட்டால் என்னென்ன பலன்கள்?

No comments