Breaking News

வங்கி லாக்கர் சாவி தொலைந்துவிட்டால் செய்ய வேண்டியது என்ன?

ல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான பெட்டக வசதியை வழங்குகின்றன. விலைமதிப்பற்ற பொருள்கள், முக்கியமான ஆவணங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைச் சேமிக்க வாடிக்கையாளர்கள் இதைப் பயன்படுத்தலாம்.
இருப்பினும், லாக்கரின் அளவு மற்றும் வங்கியின் அமைவிடத்தை பொறுத்து வங்கிகள் லாக்கர்களுக்கான கட்டணத்தை வசூலிக்கின்றன.லாக்கரைத் திறக்கும்போது, வங்கிகள் வழக்கமாக ஒவ்வொரு வாடிக்கையாளருக்கு ஒரு சாவியை வழங்குகின்றன. அதே நேரத்தில் மற்றொரு சாவியை வங்கி வைத்திருக்கும். .நீங்கள் லாக்கரை திறக்கும் சமயத்தில், ஒரு வங்கி ஊழியர் தனது சாவியுடன் லாக்கருக்கு வருவார். எனினும், வாடிக்கையாளர் தனது சாவியுடன் லாக்கரை திறக்க வேண்டும்.

லாக்கரைத் திறக்கும்போது வங்கி ஊழியர் மற்றும் லாக்கர் வைத்திருப்பவர் இருவரும் இருப்பது கட்டாயம். ஒருவேளை நீங்கள் லாக்கர் சாவியை தொலைத்துவிட்டால், உடனடியாக முதலில் வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். எஸ்.பி.ஐ உள்ளிட்ட 3 வங்கிகளில் கூறப்படும் விதிமுறைகள் குறித்து அறிந்து கொள்வோம்.ஹெச்.டி.எப்.சி வங்கியின் கூற்றுப்படி, 'நீங்கள் லாக்கர் சாவி மற்றும் எண்ணின் விவரங்களுடன் கோரிக்கை கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும். சாவி தொலைந்ததற்கான போலீசில் புகாரளித்த முதல் தகவல் அறிக்கையின் நகல் அல்லது புகாரின் ஒப்புதலையும் சமர்ப்பிக்க வேண்டும்.

புதிய சாவிக்கான தொகையை வங்கி உங்களிடமிருந்து பிடித்தம் செய்யும். பின்னர், புதிய சாவியை எப்போது, எங்கு தரப்படும் என்பதை வங்கி தெரிவிக்கும். புதிய சாவியைப் பெற, அனைத்து லாக்கர் வாடகைதாரர்களும் குறிப்பிடப்பட்ட நேரம் மற்றும் இடத்தில் இருக்க வேண்டும்.' எஸ்.பி.ஐ., திருத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, "லாக்கரின் செயல்பாட்டிற்காக வங்கி வழங்கிய சாவி, கடவுச்சொல் அல்லது வேறு ஏதேனும் ரகசிய குறியீட்டைஇழந்தால் உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். உரிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் கடைப்பிடித்து, லாக்கரை திறக்க, பூட்டை மாற்றுவதற்கான செலவுகளை ஏற்க வேண்டும்.

வங்கி அதன் சப்ளையர் மூலம் இதனை மேற்கொள்ளும். ஒருவேளை காணாமல் போன சாவியை நீங்கள் கண்டால், அதை உடனடியாக வங்கிக்குத் திருப்பித் தருவது அவசியம். ஏனெனில் அது தொலைந்துவிட்டதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.பஞ்சாப் நேஷனல் வங்கி லாக்கர் ஒப்பந்தத்தின்படி,' வங்கியால் வழங்கப்பட்ட லாக்கரின் சாவி, வாடகைக்கு எடுத்த நபர் தொலைத்துவிட்டால், உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். எதிர்காலத்தில் காணாமல் போன சாவி வங்கியிடம் ஒப்படைக்கப்படும் என்ற உறுதிமொழியும் வாடிக்கையாளரிடமிருந்து பெறப்படலாம். லாக்கரை உடைக்க அல்லது தொலைந்த சாவியை மாற்றுவதற்கான கட்டணங்கள் மற்றும் ரூ. 1000/ (ஜிஎஸ்டி அல்லாமல்) வாடகைதாரரிடமிருந்து வசூலிக்கப்படும். தொலைந்த சாவியை மாற்ற அல்லது புதிய கடவுச்சொல்லை வழங்குவதற்கு பொருந்தக்கூடிய கட்டணங்கள் ,லாக்கர் வாடகைதாரருக்குத் தெரிவிக்கப்படும்.'

No comments