Breaking News

ஆசிரியரை தாக்கிய தலைமை ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்யக்கோரி கருப்பு பட்டை அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - நாள்: 06.07.2023

அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு Federation of All Teachers' Association (FATA)

ஈரோடு மாவட்டம்

இடம்: முதன்மை கல்வி அலுவலகம், ஈரோடு.

நாள்: 06.07.2023 வியாழக்கிழமை

மாலை 5.00 மணி

ஆசிரியரை தாக்கிய தலைமை ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்யக்கோரி கருப்பு பட்டை அணிந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

அனைவருக்கும் வணக்கம்,

ஆசிரியர்களை அரவணைத்து சென்று பள்ளியை திறம்பட நிர்வகிக்க வேண்டிய ஒரு தலைமை ஆசிரியர், முகம் சுளிக்க தக்க வகையில் ஆசிரியர் கூட்டத்தில் நடந்து கொள்வதும் கண்ணியக் குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி ஆசிரியர்களை திட்டுவதும், ஆசிரியா மீது தாக்குதல் நடத்துவதும், காவல் துறையை வைத்து ஆசிரியரை மிரட்டி எழுதி வாங்குவதும், தவறுகளை மறைக்க பொய்ப்புகர் அளிக்க தூண்டுவதும் கண்டிக்கத்தக்க செயல்பாடுகளாகும்.

மேற்கண்ட செயல்பாடுகளை கண்டித்து, ஈரோடு மாவட்ட அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பில் இயற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் நடைபெறவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நிலைகளிலும் உள்ள ஆசிரிய சகோதர சகோதரிகள், கருப்பு பட்டை அணிந்து கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கோரிக்கைகள்

1) ஆசிரியர்மீது தாக்குதல் நடத்தி, அனைவராலும் மதிக்கப்படுகின்ற தலைமையாசிரியர் பணியிடத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் வகையில் நடந்து கொண்ட சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆச்ரிபை திருமதி தாட்சாயணி அவர்களை பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறையை வலியுறுத்துதல்

2) தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர்கள் மீது, பொய் புகார் அளித்த அப்பள்ளி ஆசிரியை மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துதல்

3) பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நமது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்ளுதல்

4) விதிகளை மீறியும் விதிகளுக்கு புறம்பாகவும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறைகளை அவிழ்த்து விடும் ஒரு சில தலைமை ஆசிரியர்களை அது போன்ற செயல்பாடுகளை கைவிட வலியுறுத்துதல். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு நமது உரிமைகளை நிலைநாட்டிடவும், அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்திடவும் வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு.

ஒருங்கிணைப்பாளர் & தோழமைச் சங்க நிர்வாகிகள் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு

ஈரோடு மாவட்டம்

No comments