Breaking News

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! குளுகுளு ஏசி ரூம்கள்! வெறும் ரூ.40 இருந்தால் போதும்! ஆனா ஒரு கண்டிஷன்:


நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் பயணிகள் மிகக் குறைந்த விலையில் ஏசி ரூம்களை புக் செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியும்.

இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவாக தொலைதூர பயணங்களுக்குப் பலரது முதல் சாய்ஸாக இருப்பது என்னவோ ரயில்கள் தான். குறைந்த கட்டணம், டாய்லெட் வசதி தொடங்கிப் பல வசதிகள் இருப்பதால் ரயில்களில் பயணிக்கவே பொதுமக்கள் பலரும் விரும்புகின்றனர்.

இருப்பினும், பல நேரங்களில் நமது ரயில்கள் தாமதமாக வருவதை நாம் பார்த்திருப்போம். சில நிமிடங்கள் தொடங்கிப் பல மணி நேரம் வரையிலும் கூட சில சமயம் ரயில்கள் தாமதமாக வந்து நாம் பார்த்திருப்போம்.

ரயில் பயணிகள்: இப்படி தாமதமாக வரும் ரயில்களால் பொதுமக்கள் பலரும் பிளாட்பார்மகளிலேயே நீண்ட நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்படும். ரயில் சரியான நேரத்திற்கு வந்தாலும் நாம் சில மணி நேரம் முன்கூட்டி ஸ்டேஷனுக்கு வந்துவிட்டாலும் இதே நிலைதான். பிளாட்பார்மகளில் தான் நாம் காத்திருக்க வேண்டும். இரவு நேரங்களில் பெண்கள் இதுபோல இருப்பது அவர்களுக்கு அச்சத்தையே தரும். வெயில், மழை, குளிர் என எதுவாக இருந்தாலும் பிளாட்பார்மகளில் இருந்தால் பாதிப்பு தான்.

ஆனால், இனியும் நீங்கள் அப்படிக் காத்திருக்கத் தேவையில்லை. இதற்காகவே நமது இந்தியன் ரயில்வே ஒரு திட்டத்தை வைத்திருக்கிறது. இந்த IRCTC retiring room எனப்படும் ஐஆர்சிடிசி ஓய்வு அறை வசதி பெரும்பாலும் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் இருக்கும். இதன் மூலம் கன்பார்ம் அல்லது ஆர்ஏசி லிஸ்டில் இருக்கும் பயணிகள் வெறும் 40 ரூபாய்க்கு ரூமை புக் செய்யலாம்.

சிங்கிள், டபுள் மற்றும் ஏசி எனப் பல வசதிகள் இருக்கும் நிலையில், அதில் விரும்பியதை நாம் தேர்வு செய்து கொள்ளலாம். கிளம்பும் இடம் அல்லது சேருமிடம் என்று இரண்டில் எந்தவொரு ரயில் நிலையத்திலும் இதை நாம் புக் செய்து கொள்ளலாம். ரயில் பயணிகளின் வசதிக்காக வழங்கப்படும் இந்த ரூம்களை நாம் ஆன்லைன், ஆப்லைன் என எப்படி வேண்டுமானாலும் புக் செய்து கொள்ளலாம்.

எப்படி புக் செய்யலாம்: இதில் ரூமை புக் செய்வது ரொம்பவே ஈஸி. இதற்காக நாம் https://www.rr.irctourism.com என்ற ரயில்வே இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதில் இருந்து நாம் தேவையான ரூமை புக் செய்யலாம். நமது தேவைக்கேற்ப ஏசி மற்றும் ஏசி இல்லாத ரூம்களை புக் செய்யலாம். ரூமை தேர்வு செய்த பின்னர் உங்கள் டிக்கெட் PNR எண்ணைப் பதிவு செய்து புக் செய்ய வேண்டும்.

இந்த வசதியைப் பயன்படுத்தி புக் செய்ய கன்பார்ம் ஆகியிருக்கும் ரயில் டிக்கெட் தேவை. அப்படி கன்பார்ம் ரயில் டிக்கெட் இல்லையென்றால் குறைந்தபட்சம் RAC டிக்கெட்டாவது தேவை. இந்த இரண்டில் எதாவது ஒன்று இருந்தால் மட்டுமே ரூம்களை புக் செய்ய முடியும். வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் பயணிகளால் இதில் புக் செய்ய முடியாது. மேலும், ரூமிற்கு செல்லும் போது, அடையாள அட்டையாக ஆதார் அட்டை தேவை. அங்குள்ள அதிகாரியிடம் ஆதார் அட்டையைக் காண்பித்து நாம் உள்ளே செல்லலாம்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்: ஒரு PNR எண் மூலம் ஒரு பெட்டை மட்டுமே தேர்வு செய்ய முடியும். இருப்பினும், ஒரு டிக்கெட்டில் ஐந்து பயணிகள் இருந்தால், 5 படுக்கைகளை புக் செய்யலாம்.. அதாவது எத்தனை பயணிகள் இருக்கிறார்களோ இருக்கிறதோ அத்தனை படுக்கைகளை புக் செய்யலாம்.

முன்பே சொன்னது போல வெயிட்டிங் லிஸ்டில் உள்ளவர்கள் இதில் புக் செய்ய முடியாது. உறுதிசெய்யப்பட்ட அல்லது RAC டிக்கெட்டுகளைக் கொண்ட பயணிகள் மட்டுமே ரூம்களை புக் செய்ய முடியும். ஓய்வு அறைக்குச் செல்லும் போது அடையாள அட்டைகள் தேவை. ஓய்வு பெறும் அறையை 12:00 AM முதல் 11:30 PM வரை முன்பதிவு செய்யலாம்.

சில ரயில்வே ஸ்டேஷன்களில் ஓரிரு மணி நேரம் மட்டும் ரூம்களை புக் செய்யும் வசதியும் இருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் முதல் அதிகபட்சம் 48 மணி நேரம் வரை நாம் இதில் புக் செய்ய முடியும்.

No comments