Breaking News

அரசு ஊழியர்களுக்கு "ஜாக்பாட்" வருது.. ஒரேடியா எகிறும் சம்பளம்.. ஒரே கல்லுல 2 மாங்கா.. வேறலெவல் ப்ளான்:

மத்திய அரசின் ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என்று தெரிகிறது.. அந்தவகையில் 8வது ஊதியக்குழு அமலாக வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒருமுறை புதிய ஊதியக்குழு அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2013ம் ஆண்டு 7வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டு, அது 2016ல் அமலுக்கு வந்தது. அந்தவகையில், எட்டாவது ஊதிய குழு அமைக்கப்படுவது குறித்து ஆலோசனைகள் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது.

பரிந்துரைகள்: தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் பலன்களை ஊழியர்கள் பெற்றுவருகிறார்கள்... ஆனாலும், தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதைவிட குறைவான சம்பளம் கிடைப்பதாக ஊழியர்கள் புகார் சொல்லி வருகிறார்கள்.. எனவேதான், மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக் குழுவை அமைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

8-வது ஊதியக்குழு அமைக்கப்பட்டுவிட்டால், புதிய ஆணையம் பலவேறு மாற்றங்களை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 7-வது ஊதியக் குழுவின் கீழ், இப்போது ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது.. அரசு இந்த சம்பளத்திற்கு ஃபிட்மென்ட் காரணியை அமல்படுத்தியது என்றாலும், பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் அதிகரித்தன.. இருப்பினும், ஊழியர்களின் சம்பளத்தை கணக்கிடுவதற்காகவே அரசு இந்த ஃபிட்மென்ட் காரணியை செயல்படுத்தியது.

ஊழியர்கள்: அந்தவகையில், 7-வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் காரணி 257 மடங்கு இருந்தது, அதன் பிறகு ஊழியர்களின் சம்பளம் 14.29 சதவீதம் அதிகரித்தது. இந்த அதிகரிப்பின் மூலம் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ 18,000 ஆக உள்ளது.. இனி 8-வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டால் ஃபிட்மென்ட் காரணி 3.68 மடங்கு இருக்கலாம், ஊழியர்களின் சம்பளமும் 44.44 சதவீதம் உயரக்கூடும் என்கிறார்கள்.

இந்த அதிகரிப்பின் மூலம் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இப்போதுவரை ​​8வது ஊதியக் குழுவை அமல்படுத்துவது தொடர்பான எந்தவொரு அதிகாரபூர்வ தகவலையும் அரசு அறிவிக்கவில்லை.. எப்படியும் வரும் 2024ம் ஆண்டில் 8-வது ஊதியக் குழுவை அறிமுகப்படுத்தலாம் என தெரிகிறது.

ஜாக்பாட்: காரணம், விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. மத்திய அரசு ஊழியர்களின் நலனுக்காக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வரும் நிலையில், அரசு ஊழியர்களின் மனங்களை மேலும் குளிரவைக்க, 8வது ஓய்வூதிய குழுவை அமைத்து அதிரடியை கிளப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆக, ஒருபக்கம் அடிப்படை சம்பளம் உயரும், மறுபக்கம் பிட்மென்ட் ஃபேக்டர் காரணியும் உயர்த்தப்படும் என்பதால், அரசு ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்நோக்கி உள்ளனர்.

No comments