கொழுப்பு கம்மியோ கம்மி.. பூசணி மற்றும் வெல்லம் அல்வா ரெசிபி.!
உடல் பருமன் காரணமாக பலர் தங்களுக்கு பிடித்த இனிப்பு வகைகளை சாப்பிடாமல் தவிர்த்துவிடுவார்கள். எங்கே நெய் கலந்த இனிப்புகளை சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரித்து விடுமோ என்ற காரணத்திற்காகவே சாப்பிட மாட்டார்கள்.
அந்த வகையில் கொழுப்பு குறைந்த ஆரோக்கியமான பூசணி மற்றும் வெல்லம் அல்வா எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :
பூசணியை தண்ணீர் கொண்டு சுத்தமாக அலசி அதன் தோல்களை நீக்கி துருவி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு நான்-ஸ்டிக் பாத்திரத்தை வைத்து அதில் துருவிய பூசணிக்காயை சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையாகும் வரை சமைக்கவும்.
அதேசமயம் மற்றொரு அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடானதும் ரவா சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.
பூசணிக்காய் நன்கு வதங்கியவுடன் துருவிய வெல்லம் சேர்த்து அது உருகி பூசணிக்காயுடன் சேரும் வரை கிளறவும்.
பிறகு வறுத்த ரவை மற்றும் குறைந்த கொழுப்புள்ள பாலை அதனுடன் சேர்த்து கட்டிகள் வராமல் இருக்க தொடர்ந்து கிளறவும்.
சுவைக்காக ஜாதிக்காய் பொடியை சேர்த்து ஹல்வா கெட்டியாகும் வரை தொடர்ந்து சமைக்கவும்.
ஹல்வா பதத்திற்கு வந்தவுடன் நறுக்கிய பிஸ்தா கொண்டு அலங்கரித்து சூடாக அனைவருக்கும் பரிமாறவும்.
தேவையான பொருட்கள் :
- துருவிய பூசணி - 2 கப்
- துருவிய வெல்லம் - 1/2 கப்
- வறுத்த ரவை - 2 தேக்கரண்டி
- குறைந்த கொழுப்பு பால் - 1/4 கப்
- ஜாதிக்காய் தூள் - 1/4 தேக்கரண்டி
- நறுக்கிய பிஸ்தா - 1 தேக்கரண்டி
- தண்ணீர் - தேவையான அளவு

No comments