Breaking News

ரூ.10 லட்சம் வரை கடனாக பெற முடியும்... சூப்பர் திட்டம் பற்றி தெரியுமா?

 

2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதில் ஒன்று பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம்(PMMY).
இந்த திட்டமானது சுய தொழிலை ஊக்குவிக்கும் பொறுட்டு 2015 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான அரசால் கொண்டு வரப்பட்டது.

பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் எந்தவித அடமானம் இல்லாமல் ரூ.10 லட்சம் வரை கடனாக பெற முடியும். ஆனால் இந்த லோன் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கோ விவசாயம் சார்ந்த தொழில்களுக்கோ வழங்கப்படமாட்டாது.

பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளில் கடன் வழங்கப்படுகிறது. சிஷு லோன் என்ற பிரிவின் கீழ் ரூ.50,000 வரையிலும், கிஷோர் லோன் என்ற பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலும், தருன் லோன் என்ற பிரிவின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலும் இந்த திட்டத்தில் கடனாக வழங்கப்படுகிறது. இந்த லோனை நீங்கள் எந்தவொரு பொதுத்துறை அல்லது தனியார் வங்கிகள், கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள் அல்லது வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் பெற முடியும்.

திட்டத்தின் நன்மைகள் :

ஒருவர் சுயதொழில் தொடங்க விரும்பினால், இந்த திட்டத்தின் கீழ் ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரையில் எந்தவித அடமானமும் இல்லாமல் கடனாக பெற முடியும். மேலும் இதற்கு எந்த செயலாக்க கட்டணமும் கிடையாது. 12 மாதங்கள் முதல் 5 வருடங்களுக்குள் நீங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டும். ஒருவேளை ஐந்து வருடத்தில் நீங்கள் கடனை திரும்ப செலுத்தாவிட்டால், அடுத்த ஐந்து வருடங்களுக்கு நீட்டித்துக்கொள்ளும் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது.

பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தில் உள்ள இன்னொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், நீங்கள் வாங்கிய மொத்த கடன் தொகைக்கும் வட்டி செலுத்த வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக முத்ரா கார்டு மூலமாக நீங்கள் செலவழித்த பணத்திற்கு மட்டும் வட்டி செலுத்தினால் போதும்.

யாரெல்லாம் தகுதியனவர்கள்?

1. லோனுக்கு விண்ணப்பிக்கு நபர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

2. விண்ணைப்பிக்கும் நபர் இதற்கு முன் எந்த வங்கியிலும் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் இருக்க கூடாது.

3. கார்ப்பேரேட் நிறுவனங்களின் கீழ் எந்தவொரு தொழிலுக்கும் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற முடியாது.

4. கடனுக்கு விண்ணப்பத்தவரின் பெயரில் வங்கி கணக்கு இருக்க வேண்டும்.

5. 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே இந்த கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

1. முத்ரா யோஜனா திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான mudra.org.in செல்லவும்.

2. இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் சிஷு, கிஷோர், தருன் என மூன்று வகையான லோன் பட்டியலிடப்பட்டிருக்கும். அதில் உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யுங்கள்.

3. இப்போது புதிய பக்கம் ஒன்று திறக்கும். அதில் இருக்கும் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளுங்கள்.

4. விண்ணப்பங்களில் எல்லா விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யுங்கள்.

5. உங்களின் பான் கார்டு, ஆதார்டு கார்டு விவரங்கள், வருமான வரி செலுத்தியிருந்தால் அதற்கான விவரங்கள், வீட்டு முகவரி சான்றுகள், பிசினஸ் முகவரி மற்றும் பாஸ்போர்ட் அளவு கொண்ட புகைப்படத்தை இணைக்கவும்.

6. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை எடுத்துகொண்டு உங்களுக்கு அருகிலுள்ள வங்கிக்குச் சென்று கொடுக்கவும்.

No comments