தொடக்கமே ரூ.28,000 சம்பளம்.. டிகிரி, டிப்ளமோ முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு.. அழைக்கும் ஏஐஇஎஸ்எல்
ஏஐஇஎஸ்எல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பம் செய்வோர் நேரடியாக மாதம் ரூ.28 ஆயிரம் சம்பளத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
மத்திய அரசின் இந்திய விமான போக்குவரத்து பொது இயக்குனரகத்தின் அனுமதியுடன்
இந்தியாவில் ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீஸ் லிமிடெட் (Air India Engineering Services Limited or AIESL) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
முக்கிய விமான நிலையங்களில் அனைத்து என்ஜினீயரிங் துறை சார்ந்த உதவிகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிலையில் தான் ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள்: ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீஸ் லிமிடெட்டில் ஏர்கிராப்ட் டெக்னீசியன் பணிக்கு 90 பேர், டெக்னீசியன் (Fitter/Sheet Metal, Carpenter, Upholstery, Welder, X-Ray, NDT), பணிக்கு 10 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி: ஐடிஐ, டிப்ளமோ, பிஎஸ்சி, பிஇ, பிடெக் உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ ஏர்கிராப்ட் மெயின்டெனன்ஸ் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் ஸ்டீரிம், மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங், ஏர்க்கிராப் டிரெய்னிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
ஏர்க்கிராப்ட் டெக்னீசியன் (Avionics) (எலக்ட்ரானிக்ஸ்/இன்ஸ்ட்ரூமென்டல்/ரேடியோ) பணிகளுக்கு டிப்ளமோவில் ஏர்க்கிராப்ட் மெயின்டெனன்ஸ் என்ஜினீயரிங், அவினானிக்ஸ் ஸ்டீரிம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், ரேடியா, இன்ஸ்ட்ரூமென்டேசன் என்ஜினீயரிங், ஏர்க்கிராப்ட் எலக்ட்ரிக்கல் ஆர்டிபிசியர், ஏர் எலக்ட்ரிக்கல் ரேடியோ ஆர்டிபிசியர் படிப்புகளையும் முடித்திருக்க வேண்டும்.
டெக்னீசியன் பணிக்கு ஐடிஐயில் பிட்டர், ஷீட் மெட்டல், கார்பென்ட்ர், அப்ஹோல்ஸ்ட்ரி, பெயிண்டர், வெல்டர், மெஷினிஸ்ட், டிப்ளமோ மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், பிஎஸ்சி இயற்பியல், பிஇ/பிடெக்கில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிகஸ் என்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு - மாத சம்பளம்: பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது என்பது 01.02.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினரக்கு 5 வயது வரையும் தளர்வுகள் உண்டு. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.28 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் careers.nr@aiesl.in இணையதளம் மூலம் https://forms.gle/nJMxtAbFkgzLQoSF9 என்ற பிரிவில் பிப்ரவரி 23ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்து நேர்க்காணலில் பங்கேற்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.1,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் இ-மெயில் அல்லது செல்போன் அழைப்பு மூலம் நேர்க்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
நேர்க்காணலில் திறனறி தேர்வு நடத்தி பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இது ஒரு தற்காலிக பணியாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் முதலில் 5 ஆண்டு பணியமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு அதிகபட்சமாக 5 ஆண்டு வரை பணி நீட்டிப்பு என்பது செய்யப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments