Breaking News

தையல் மெஷின் வாங்குவதற்கு மத்திய அரசு வழங்கும் ரூ.15000! இந்த தகுதி இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

 

தையல் மெஷின் வாங்குவதற்கு மத்திய அரசு வழங்கும் ரூ.15000! இந்த தகுதி இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!

கை தொழில்களில் முதல் இடத்தை வகிப்பது தையல் தொழில். இந்த தொழில் மூலம் ஆண், பெண் அனைவரும் நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர்.

பிளவுஸ், மிடி, சட்டை, பேண்ட், சுடிதார்.. என பல வகையான உடைகள் தையல் மெஷின் மூலம் தைக்கப்பட்டு வருகிறது. சாதாரண பிளவுஸ் தைக்க ரூ.120 வரை பணம் வாங்கப்பட்டு வருவதால் வீட்டில் உள்ள பெண்களுக்கு இவை சிறந்த தொழிலாக மாறி வருகிறது.

இந்த தொழிளுக்கு வீட்டில் சிறிய இடம் ஒதுக்கினால் போதும். தையல் மெஷின் தான் இதில் பெரிய முதலீடாக பார்க்கப்படுகிறது.

தையல் தொழில் கற்றும் மெஷின் வாங்குவதற்கு பணம் இல்லாமல் பலர் கஷ்டப்பட்டு வருகின்றனர். இவ்வாறு தையல் தொழிலில் ஆர்வமாக இருப்பவர்களுக்கு தையல் மெஷின் வாங்குவதற்கு ரூ.15000 மத்திய அரசு வழங்கி வருகிறது.

பிரதான் மந்திரி விஸ்வகர்மா என்ற திட்டத்தின் கீழ் இலவச தையல் மெஷின் வாங்குவதற்கு இந்த தொகையானது வழங்கப்பட்டு வருகிறது.

பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டத்தில் சேருவதற்கு தகுதி…

இந்திய குடிமகன்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.

பயனாளர் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

அதுமட்டும் இன்றி அரசின் இலவச தையல் திட்டத்தின் மூலம் தையல் தொழில் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருத்தும்.

பிரதான் மந்திரி விஸ்வகர்மா - இலவச தையல் இயந்திரம் பெற தேவைப்படும் ஆவணங்கள்:-

1)ஆதார்
2)வங்கி கணக்கு எண்
3)பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
4)தொலைபேசி எண்

பிரதான் மந்திரி விஸ்வகர்மா - இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பம் செய்வது எப்படி?

1)https://pmvishwakarma.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்.

2)பிறகு அதில் கேட்கப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களை பதிவு செய்யவும்.

3)விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் ரசீது(ஒப்புதல் சீட்டு) ஒன்று தங்களுக்கு வழங்கப்படும். இதை தொலைக்காமல் வைத்துக் கொள்ளவும். ரசீது சரிபார்க்கப்பட்டு இலவச தையல் மெஷின் வாங்குவதற்கான ரூ.15,000 தங்கள் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டு விடும்.

No comments