Breaking News

தபால் அலுவலகங்களில் இன்று முதல் தங்கப்பத்திரம்.. என்னது 161 சதவீதம் லாபமா? மேஜர் குட்நியூஸ்

 


தமிழகத்தில் உள்ள மாவட்ட தபால் நிலையங்களில் இன்று முதல் தங்க பத்திரம் விற்பனை தொடங்கி உள்ளது.

முதலீட்டுத் தொகைக்கு 2.50 சதவீதம் வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் நாளில் அன்றுள்ள விலைக்கு நிகரான பணமும் கிடைக்கும் என கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரம் திட்டத்தின் கீழ், யார் வேண்டுமானாலும் தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்ய முயும். இதற்கான வெளியீட்டு விலையை ஒரு கிராமுக்கு ரூ.6271 என ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. ஆண்டுக்கு 2.50 சதவீதம் வட்டி 6 மாதத்துக்கு ஒருமுறை பெற்றுக் கொள்ளலாம். முதிர்வு தொகை 24 கேரட் தங்கத்துக்கு ஈடாக அப்போதைய தங்கத்தின் மதிப்புக்கு பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், தபால் நிலையங்கள், அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள், என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ ஆகியவற்றில் தங்கப் பத்திரங்களை வாங்க முடியும். தபால் துறையின் கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளாவது

மத்திய அரசு தங்கப்பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. தங்கப் பத்திர விற்பனை இன்று (திங்கட்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடைபெற உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6,263 ஆகும். குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை தலைமை நபால் நிலையங்களிலும் மற்றும் அனைத்து துணை தபால் நிலையங்களிலும் இந்த ஐந்து நாட்களும் தங்கப்பத்திர விற்பனை நடைபெறும். இந்த நிதியாண்டின் கடைசி தங்கப் பத்திர விற்பனை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் பத்திர வடிவில் இருப்பதால், பாதுகாப்பாக இருக்கும். தனி நபர் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை வாங்கலாம். மேலும் முதலீட்டுத் தொகைக்கு 2.50 சதவீதம் வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் நாளில் அன்றுள்ள விலைக்கு நிகரான பணமும் கிடைக்கும். முதலீட்டாளர்கள் 2016-ம் வருடம் இந்த திட்டத்தின் மூலம் முதலீடு செய்த தொகைக்கான (ஒரு கிராம்-ரூ.2600) முதிர்வு தொகையை தற்போது (ஒரு கிராம்- ரூ.6271) பெற்றுள்ளனர். அதாவது 161 சதவீதம் லாபம் ஈட்டி உள்ளனர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு, பான் கார்டு கட்டாயம் தேவை, அதனுடன், ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல்பக்க நகல் ஆகியவற்றைக் கொண்டு, தங்கப் பத்திரத்தை அனைத்து தபால் நிலையங்களிலும் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 9894774410, 9080820107 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்" இவ்வாறு அதில் கூறியுள்ளார்

No comments