தங்கம் விலை குறையுமா? நடப்பு வாரத்தில் எப்படி இருக்கும்..?
தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாகவே பெரிய அளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. எனினும் தொடர்ந்து ஃபியூச்சர் சந்தையில் அவுன்ஸூக்கு 2000 டாலர்களுக்கு மேல் காணப்படுகிறது.
இது அதிகரித்து வரும் கடன் பத்திர சந்தைக்கு மத்தியில், விலை குறையாவிட்டாலும் அதிகரிக்கவில்லை என்பது ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் வரவிருக்கும் நாள்களில் எப்படி இருக்கலாம்? கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன? விலை குறைய வாய்ப்பிருக்கிறததா? வரும் நாள்களில் எப்படி இருக்கலாம்? வாருங்கள் பார்க்கலாம்.
பத்திர சந்தை ஏற்றம்
அமெரிக்காவின் முக்கிய தரவுகள் சில சந்தைக்கு சாதகமாக வந்த நிலையில், அமெரிக்க பத்திர சந்தை ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. எனினும் வரவிருக்கும் நாள்களில் அமெரிக்க டாலர் மதிப்பானது எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பொருளாதார வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், அது டாலர் மதிப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தத்தலாம் என்ற அச்சம் இருந்து வருகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
விலை அதிகரிக்கலாம்
அமெரிக்க மத்திய வங்கியானது 2024-ம் ஆண்டில் வட்டி குறைப்பை கண்டிப்பாக மேற்கொள்ளும் என பல தரப்பினரும் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர். உண்மையில் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், நிச்சயம் வட்டி குறைப்பு என்பது இருக்கலாம். அதேசமயம் சர்வதேச அளவில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் என்பது நீண்ட கால போக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். ஆக தங்கம் விலையானது குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கத்தை சந்தித்தாலும், நீண்ட கால அடிப்படையில் ஏற்றம் காண வாய்ப்புகள் அதிகம்.
பணவீக்க தரவு
தங்கம் விலைதொடரும் ஐபிஓ திருவிழாக்கள்... சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பா?சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் வட்டி குறைப்பு செய்யப்படலாம் என்ற யூகமும் மேற்கொண்டு அழுத்தத்தை கொடுத்து வருகிறது. ஆக அமெரிக்காவின் பணவீக்கம் குறித்த தரவும், அமெரிக்க மத்திய வங்கியின் முடிவு என்பதும் தங்கம் விலையை நிர்ணயிக்க கூடிய முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக வரும் நாள்களில் அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறித்த குறியீடானது (பணவீக்கம்) வெளியாக உள்ளது. இது வட்டி விகித மாற்ற நடவடிக்கையில் முக்கிய பங்கு வகிக்கலாம்.
தேவை எப்படி இருக்கலாம்?
மேற்கொண்டு சீனா மற்றும் ஜப்பானில் விடுமுறை காலம் தொடங்க உள்ள நிலையில், தங்கத்தின் தேவையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது மேற்கொண்டு தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
நிபுணர்கள் பலரும் மார்ச் மாதத்தில் நடக்க விருக்கும் அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி குறைப்பை செய்யலாம் என எதிர்பார்க்கின்றனர். ஆனால் இதற்கு சாத்தியம் மிக குறைவு என பவல் அறிக்கையின் மூலம் அறியலாம். எனினும் மே மாத ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்திற்கு முன்னதாக வட்டி குறைப்பு கட்டாயம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெக்னிக்கல் எப்படி இருக்கிறது?
டெக்னிக்கலாக தங்கம் விலையானது 2015 டாலர்கள் என்ற லெவலை உடைத்தால், அடுத்த கட்டமாக 2000 டாலர்களை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட முக்கிய லெவலை தாண்டி சரிவு தொடரும் பட்சத்தில், 1988 டாலர் என்பது முக்கிய லெவல் ஆகவும், 1966 - 1965 டாலரையும் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ஏற்றம் தொடரும்பட்சத்தில் 2033 டாலர் நிலையை உடைக்கும்பட்சத்தில், அடுத்தகட்டமான 2044 - 2045 டாலர் என்ற நிலையை எட்டலாம். அதை தாண்டி தொடர்ந்து ஏற்றம் காணும்பட்சத்தில் 2065 டாலரை எட்டலாம். கடந்த ஜனவரி மாதம் கிட்டத்தட்ட 2079 டாலரை எட்டிய தங்கம் விலையானது, மீண்டும் நீண்ட கால அடிப்படையில் அந்த லெவலை உடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. அடுத்த முக்கிய லெவல் ஆக 2100 டாலர் மற்றும் 2120 டாலரையும் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறுகிய கால நிலைப்பாடு?
இந்திய சந்தையை பொறுத்த வரையில் கடந்த 5 வர்த்தக தினங்களாகவே 62,100 - 62,800 ரூபாய் என்ற நிலையில் இருந்து வருகிறது. வரவிருக்கும் நாட்களில் அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்த தரவு, வட்டி விகிதம் குறித்த முக்கிய முடிவு என பலவும் வெளியாகவுள்ளது. கடந்த வாரத்திலேயே வலுவான பொருளாதார காரணிகள் பற்றிய தரவானது வெளியான நிலையில் கூட, தங்கம் விலையானது சரிவைக் காணவில்லை. இதற்கிடையில் வரும் நாள்களிலும் தங்கம் விலையானது பெரிய அளவில் ஏற்றம் காண வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.
தங்கம் விலை ஸ்மால்கேப் பங்குகளுக்கு மரண அடி... பொதுத் துறை, ரயில்வே பங்குகள் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?ஆர்.எஸ்.ஐ என்பது தெளிவான ஒரு நிலையை காட்டவில்லை. இது ஏற்றம் காணலாம். அல்லது சரிவுக்கும் வழிவகுக்கலாம் என்பது போல காணப்படுகிறது. ஒரு வேளை சரிவு இருந்தால், வாங்கியிருப்பவர்கள் 62,000 ரூபாயை ஸ்டாப் லாஸ் ஆக வைத்துக் கொள்ள நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். எப்படி இருப்பினும் வரும் நாள்களில் ஏற்ற இறக்கம் என்பது நிச்சயம் அதிகம் இருக்கலாம். அதிலும் அமெரிக்க பணவீக்க தரவுக்கு முன்னதாக அதிகம் இருக்கலாம், ஆக குறுகிய கால முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.
Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters
Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.
General Disclaimer and Terms & Conditions of the research report
INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. ALL THE DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.
One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)
முதலீடு செய்வதற்கு முன்னால் ஒரு செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைசரிடம் கலந்தாலோசித்த பின்னரே செய்ய வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காக காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் வாங்குவது லாபகரமாக இருக்கும்.
No comments