திடீரென நீக்கப்பட்ட 2000 செயலிகள்.. இது போனில் இருந்தால் உடனே டெலிட் பண்ணுங்க.. மத்திய அரசு ஆக்சன்
கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப்ஸ் ஸ்டோரில் இருந்து 2200 செயலிகள் தற்போது நீக்கப்பட்டு உள்ளன.
அரசின் இந்த நடவடிக்கை பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன. வரும் நாட்களில் மேலும் 500 செயலிகள் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி மோசடிகளில் இருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாக செப்டம்பர் 2022 மற்றும் ஜனவரி 2024 க்கு இடையில் Google அதன் Play Store இலிருந்து 2,200 க்கும் மேற்பட்ட போலி கடன் செயலிகளை அகற்றியுள்ளது.
பொய்யான கடன் செயலிகளை எதிர்த்து ஆர்பிஐ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கே காரத், போலி கடன் செயலிகளின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) போன்ற அரசு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு இடையேயான கூட்டு முயற்சிகளை எடுத்துரைத்தார். இந்த ஒத்துழைப்பின் மூலம் Google ஆயிரக்கணக்கான கடன் செயலிகளை மதிப்பாய்வு செய்துள்ளது, கடந்த இரண்டு ஆண்டுகளில் Play Store இலிருந்து 4,700 மோசடியான செயலிகளை நீக்கி உள்ளது.
நீக்கம்: மக்களுக்கான பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த, Google Play Store இல் கடன் செயலிகளுக்கான கட்டுப்பட்டு கொள்கையை அதிகப்படுத்தி உள்ளது. ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களால் (REs) வெளியிடப்பட்ட செயலிகள், ஆர்பிஐ மூலம் அனுமதி பெற்ற கடன் நிறுவனங்கள் மட்டுமே கடன் வழங்குவதற்கு இனி அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரிசர்வ் வங்கி விதிமுறைகள்: ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர் பாதுகாப்பை மேம்படுத்தவும், டிஜிட்டல் கடன் செயலிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் டிஜிட்டல் கடன் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது.
சைபர் கிரைம் கண்காணிப்பு: இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) மோசடி நடவடிக்கைகளைத் தடுக்க டிஜிட்டல் கடன் வழங்கும் செயலிகளை தீவிரமாகக் கண்காணிக்கிறது.
விழிப்புணர்வு பிரச்சாரங்கள்: அரசாங்கமும் வங்கிகளும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்துகின்றன. இதற்காக ஆர்பிஐ ஆன்லைன் பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளது.
காரணம் என்ன?: பெரும்பாலும் சீனாவை சேர்ந்த செயலிகள்தான் அதிகமாக இப்படி தடை செய்யப்பட்டு உள்ளன. இவைதான் அதிக ரூபாய்க்கு கடன் வழங்கி ஏமாற்றியது, மக்களிடம் கடன் கொடுத்த பின் மிரட்டல் விடுத்தது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது.
போலி கடன் பயன்பாடுகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க முக்கிய வழிகள்: சந்தேகத்திற்கிடமான செயலிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாகப் புகாரளிக்கவும்.
நீக்க வேண்டும்: ஏற்கனவே உங்கள் போனில் இந்த செயலிகள் இருந்தால் அது இயங்காது. ஆனால் சில செயலிகள் இயங்கும் பட்சத்தில் அந்த செயலிகளை தொடர்ந்து பயன்படுத்த கூடாது. அதில் இருந்து உடனே வெளியேற வேண்டும்.
இந்த செயலிகள் தொடர்பான புகார்களை ஆர்பிஐ தொடங்கி சைபர் கிரைம் வரை அளிக்கலாம். அதேபோல் இந்த செயலிகள் சார்பாக விடுக்கப்படும் மிரட்டல்களையும் போலீசாரிடம் புகாராக அளிக்கலாம் என்று நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கே காரத் தெரிவித்துள்ளார்.
No comments