Breaking News

சிறுநீரக கல் உருவாவதன் முதல் கட்ட அறிகுறிகள் இதுதானாம்... இந்த அறிகுறிகள் இருந்தா உடனே டாக்டரை பாருங்க...!

 


20 முதல் 50 வயதிற்குட்பட்டவர்களில் சிறுநீரகக் கல் பிரச்சனை தொடர்ந்து காணப்படும் வயிறு தொடர்பான நோய்களில் ஒன்று.

இருப்பினும், அதை முன்கூட்டியே கண்டறிந்தால் பெரிய ஆபத்துக்களைத் தடுக்கலாம். நீரிழப்பு, உடல் பருமன், அழற்சி குடல் நோய்கள் மற்றும் அதிக அளவு புரதம், உப்பு அல்லது குளுக்கோஸ் போன்ற பல காரணங்களால் இந்த ஆரோக்கிய நிலை ஏற்படுகிறது.

சிறுநீரக கற்கள் சிறுநீரகத்தில் உருவாகக்கூடிய கடினமான கனிமத் துண்டுகள்,சிலசமயங்களில் சிறுநீரில் கடந்து செல்லும் அளவுக்கு சிறியது. இருப்பினும், பெரிய கற்களை உடைக்க அல்லது அகற்ற மருத்துவ உதவி தேவைப்படலாம்.

சிறுநீரக கற்களை ஆரம்பத்திலேயே நிவர்த்தி செய்வது கடுமையான சிக்கல்களைத் தடுக்கலாம், ஆனால் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அவை கடுமையான ஆரோக்கிய சிக்கல்களுக்கு வழிவகுக்கும். சிறுநீரக கற்கள் இருப்பதைக் குறிக்கும் ஐந்து எச்சரிக்கை அறிகுறிகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முதுகில் கடுமையான வலி

சிறுநீரகக் கற்களின் குறிப்பிடத்தக்க அறிகுறி முதுகு அல்லது பக்கவாட்டில் கூர்மையான வலி ஏற்படுவதாகும். இந்த வேதனையான வலி வயிறு மற்றும் இடுப்பு வரை நீள்வதற்கு வாய்ப்புள்ளது, இது கணிசமான அசௌகரியத்தை ஏற்படுத்தும். சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால் இது மிகவும் ஆபத்தானதாக மாறும்.

சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல்

சிறுநீர்க்குழாய்க்கும் சிறுநீர்ப்பைக்கும் இடைப்பட்ட பகுதியில் கல் நகரும் போது, சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரியும் உணர்வை நீங்கள் அனுபவிக்கலாம், இது டைசுரியா என அழைக்கப்படுகிறது. இந்த நிலை ஏற்பட்டால் சிறுநீரகக் கற்கள் பெரிய அளவில் இருக்கின்றன என்று அர்த்தம்.

சிறுநீரில் இரத்தம்

ஹெமாட்டூரியா அல்லது சிறுநீரில் இரத்தம் இருப்பது சிறுநீரக கற்களின் மிகவும் பொதுவான அறிகுறியாகும். சிறுநீரில் வெளியேறும் இரத்தத்தின் நிறம் சிவப்பு நிறத்தில் இருந்து இளஞ்சிவப்பு அல்லது பழுப்பு நிறமாக இருக்கலாம்.

குமட்டல் மற்றும் வாந்தி

சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தியை அனுபவிக்கின்றனர். சிறுநீரகம் மற்றும் இரைப்பைக் குழாயின் இடையே பகிரப்பட்ட நரம்பு இணைப்புகள் அல்லது கடுமையான வலிக்கு உடலின் எதிர்வினை காரணமாக இந்த அறிகுறிகள் ஏற்படலாம்.

காய்ச்சல் மற்றும் குளிர்

அடிக்கடி ஏற்படும் காய்ச்சல் சிறுநீரகம் அல்லது சிறுநீர் பாதையின் மற்ற பகுதிகளில் தொற்று இருப்பதைக் குறிக்கலாம். சிறுநீரகம் தொடர்பான நோய்த்தொற்றுகளின் விஷயத்தில், காய்ச்சல் பொதுவாக அதிகமாக இருக்கும், 100.4˚F (38˚C) அல்லது அதற்கும் அதிகமாக, குளிர் அல்லது நடுக்கத்துடன் இருக்கும்.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

அடிக்கடி சிறுநீர் கழிப்பது சர்க்கரை நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக இருந்தாலும், சிறுநீரக கற்களின் அறிகுறியும் கூட. இம்மாதிரியான அறிகுறி சிறுநீரக கற்கள் கீழ் சிறுநீர் பாதைக்கு நகர்ந்துள்ளதைக் குறிக்கிறது. இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். சர்க்கரை நோயாளிகள் இந்த கவலையைத் தவிர்க்க வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

துர்நாற்றமிக்க சிறுநீர்

சிறுநீர் பிங்க், சிவப்பு அல்லது ப்ரௌன் நிறத்தில் இருந்தால், அது சிறுநீரக கற்களின் அறிகுறியாகும். சில நேரங்களில் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் இருக்காது. ஆனால் துர்நாற்றத்துடன் அல்லது தெளிவற்ற நிலையில் இருக்கும். இது சிறுநீரக கற்களின் தெளிவான அறிகுறியாகும்.

இந்த எச்சரிக்கை அறிகுறிகளை உணர்ந்து, உடனடி மருத்துவ உதவியை நாடுவது சிறுநீரக கற்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நிர்வகிக்கவும், சாத்தியமான சிக்கல்களைத் தடுக்கவும் உதவும்.

No comments