Breaking News

பர்சனல் லோன் வாங்குற பிளானா? இந்த விஷயங்களை கவனிக்க மறக்காதீங்க!

 


ர்சனல் லோன் வாங்குவது ஒரு காலத்தில் எளிமையான விஷயமாக இருந்தாலும் இப்போது இது சம்பந்தப்பட்ட ஏராளமான விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அடமானமில்லா லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மீதான ரிஸ்க் விகிதத்தை தற்போது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அதிகரித்துள்ளது. பர்சனல் லோன்களுக்கு அதிக டிமாண்ட் இருப்பதன் காரணமாக RBI இந்த முடிவை எடுத்துள்ளது. ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா எடுத்துள்ள இந்த புதிய முடிவின் காரணமாக வங்கிகள் மற்றும் NBFCகள் பர்சனல் லோன்களை இனி அதிக வட்டி விகிதங்களில் தர உள்ளன.

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் இந்த முடிவு இதற்கு முன்பு ஆலோசனையாக இருந்து வந்த பட்சத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக BNPL, நோ காஸ்ட் EMI, ஸ்மால் டிக்கெட் லோன்கள் போன்ற பாதுகாப்பற்ற லோன்களை நாம் அதிக வட்டி விகிதங்களுக்கு வாங்க வேண்டி இருக்கும்.

இதுபோன்ற சூழ்நிலையில் பர்சனல் லோன் வாங்க நினைக்கும் நபர்கள் ஒரு சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நிலுவையில் உள்ள கடன்களை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும்.


லோன்கள் பெறுவதற்கு இனி கடன் பெறுபவர்கள் அதிக கிரிடிட் ஸ்கோர் வைத்திருக்க வேண்டும். 700 -க்கும் அதிகமான ஸ்கோர் நல்ல கிரெடிட் ஸ்கோராக கருதப்படுகிறது. இதற்கு ஒருவர் கிரெடிட் கார்டு பில்கள் மற்றும் பிற நிலுவையில் உள்ள கடன்களை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும்.

அடிக்கடி வேலை மாறுவதை தவிர்க்கவும்:

கிரெடிட் ஸ்கோரை தவிர கடன் பெறுபவரின் மாத வருமானம், வேலை ப்ரொபைல், எம்ப்ளாயர் ப்ரொபைல் போன்ற விஷயங்களும் லோன் வழங்குவதற்கு முன்பு கருத்தில் கொள்ளப்படும். நிலையான வருமானம் பெறக்கூடிய கடன் பெறுபவர்களையே கடன் வழங்குனர்கள் தேர்வு செய்கின்றனர். ஆகவே உங்களுடைய பொருளாதார நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு உங்களிடம் தொடர்ச்சியான வேலை சார்ந்த வரலாறு இருக்க வேண்டும்.

கடன் மற்றும் வருமான விகிதத்தை பராமரித்தல்:

உங்களுடைய வருமானம் எவ்வளவு மற்றும் உங்களால் எவ்வளவு கடனை சமாளிக்க முடியும் என்பது போன்ற விஷயங்களை கடன் வழங்குனர்கள் ஆய்வு செய்வார்கள். எனவே உங்களது மொத்த செலவுகளை குறைத்தோ அல்லது உங்களுடைய மாத வருமானத்தை அதிகரித்தோ DTI விகிதத்தை நீங்கள் குறைவாக பராமரிக்க வேண்டும்.

விகிதங்களை ஒப்பிட்டு பார்த்தல்:

  • முடிந்தளவு பல்வேறு கடன் வழங்குனர்கள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்த்து ஒன்றை தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.

  • ஏற்கனவே நீங்கள் டெபாசிட்கள் அல்லது லோன்கள் அல்லது கிரெடிட் கார்டுகள் வைத்திருக்கக் கூடிய வங்கிகள்/NBFCகளை தொடர்பு கொள்வதன் மூலமாக உங்களது லோன் பெறக்கூடிய செயல்முறையை நீங்கள் ஆரம்பிக்கலாம்.

உங்களிடம் கிரெடிட் குறைபாடு இருப்பதை காட்ட வேண்டாம்:

  • பல்வேறு கடன் வழங்குனர்களுக்கு நேரடியாக லோன் அப்ளிகேஷன்களை வழங்குவதை தவிர்க்கவும். இது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம்.

  • எப்பொழுதும் ஒரு லோன் கோரிக்கையை வைக்கும் பொழுது உங்களுக்கு எதற்காக அந்த லோன் தேவைப்படுகிறது மற்றும் அதனை நீங்கள் எப்படி திருப்பி செலுத்துவீர்கள் என்பதை தெளிவாக விளக்குங்கள். இது லோன் அப்ரூவலுக்கான உங்களது வாய்ப்புகளை அதிகரிக்கும். லோன் அப்ரூவல் என்பது லெண்டரை பொருத்து மாறுபட்டாலும், மேலே குறிப்பிட்டுள்ள சில படிகளை பின்பற்றுவது லோன் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என்பதையும் மனதை வைத்துக் கொள்ளுங்கள்.

No comments