சிபில் ஸ்கோரை பாதிக்காமல் கிரெடிட் கார்டை பயன்படுத்துவது எப்படி?
இன்று இந்தியாவில் பலர் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். கிரெடிட் கார்டுகள் நமக்கு கிரெடிட் வசதிகளை வழங்குகிறது.
விலைமதிப்புள்ள பொருட்களை EMI மூலமாக வாங்கவும், டிஸ்கவுண்டுகள் மற்றும்
பில்களை வட்டி இல்லாமல் சௌகரியமாக திருப்பி செலுத்த கூட கூடிய வசதிகளை
கிரெடிட் கார்டுகள் வழங்குகிறது.
சுருக்கமாக சொன்னால் கிரெடிட் கார்டுகளை சரியாக பயன்படுத்தும் பட்சத்தில் அது நமது வாழ்க்கையை மிகவும் எளிதாக மாற்றுகிறது.
ஆனால் கிரெடிட் கார்டுகளை அதிகப்படியாக பயன்படுத்துவது, பேமென்ட்களை வழக்கமான முறையில் செலுத்த தவறுவது அல்லது அதிக வட்டி கொண்ட கடன்களை பெறுவது போன்றவற்றை செய்யும் பொழுது கிரெடிட் கார்டு வைத்திருப்பது மிகவும் ஆபத்தானதாக அமைகிறது. கிரெடிட் கார்டுகளை சரியான வழியில் பயன்படுத்தும் பொழுது அதிலிருந்து அதிகபட்ச பலன்களை பெற்றுக் கொள்ளலாம்.
சரியான நேரத்தில் பேமென்டை செலுத்துங்கள். அவ்வளவுதான், உங்களது கிரெடிட் ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும். ஆனால் நீங்கள் பேமென்ட்களை ஒழுங்காக செலுத்தாவிடில் பிரச்சனையில் மாட்டிக் கொள்வீர்கள். அடுத்தபடியாக கிரெடிட் பயன்பாட்டை கட்டுப்படுத்தக்கூடிய தேவையான நடவடிக்கைகளையும் நீங்கள் எடுக்க வேண்டும்.
கிரெடிட் கார்டு இருக்கிறதே என்பதற்காக அதனை இஷ்டத்திற்கு பயன்படுத்தக் கூடாது. உறவினர் அல்லது நண்பருக்கு கிரெடிட் கார்டை பயன்படுத்த கொடுப்பது தற்போதைய டிரெண்டாக மாறிவிட்டது. அவர்களுக்கு கிரெடிட் கார்டு கொடுப்பதில் தவறொன்றும் இல்லை. ஆனால் அவர்கள் அந்த கடனை ஒழுங்காக திருப்பி செலுத்தாவிட்டால் தேவையில்லாத பிரச்சனைகளில் மாட்டிக் கொள்வோம். பலர் இந்த மாதிரியான சிக்கல்களில் மாட்டிக்கொண்டு தவித்து வருகின்றனர். முதலாவதாக கிரெடிட் கார்டுகளை பிறரது பயன்பாட்டிற்கு கொடுப்பது கார்டின் விதிகள் மற்றும் நிபந்தனைகளை மீறுவதாகும். இரண்டாவதாக வேறொருவர் உங்கள் கார்டை பயன்படுத்தினாலும் கூட அந்த கடனுக்கான பொறுப்பை நீங்கள் தான் ஏற்று கொள்ள வேண்டும்.
கடன்களை நீங்கள் செலுத்த தவறும் பொழுது தாமதமாக பேமென்ட் செலுத்துவதற்கான பெனாலிட்டி மற்றும் நீங்கள் செலுத்த வேண்டிய பணத்திற்கான வட்டி போன்றவை உங்கள் தலையில் விடியும். இது உங்களது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். எனவே இது மாதிரியான கடன் வளைக்குள் மாட்டிக்கொள்ளாமல் கிரெடிட் கார்டை பயன்படுத்துவது எப்படி மற்றும் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவது எப்படி என்பதை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு வைத்திருப்பதை தவிர்க்கவும்...
நீங்கள் ஒரு கிரெடிட் கார்டு வாங்கும் பொழுது அதற்கான தேவை என்ன மற்றும் அதனை நீங்கள் எப்படி பயன்படுத்த போகிறீர்கள் என்பது போன்ற கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். அவசரகால சூழ்நிலைகள், ஒரே நேரத்தில் பெரிய தொகையை செலுத்தி வாங்க முடியாத பொருட்களை வாங்குவதற்கு அல்லது டிஸ்கவுண்டுகளை பெறுவதற்கு போன்ற விஷயங்களுக்கு நீங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்.
மிதமான கிரெடிட் லிமிட் கொண்ட ஒரு கிரெடிட் கார்டு உங்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அதிக கிரெடிட் லிமிட் கொண்ட கிரெடிட் கார்டை வாங்காதீர்கள். உங்களுக்கு ஒரு கார்டு போதுமானதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால் இரண்டாவது கார்டை வாங்க வேண்டாம்.
கிரெடிட் கார்டு வைத்திருப்பதால் அடிக்கடி ஷாப்பிங் செய்யக்கூடிய பழக்கத்தை ஒரு சிலர் வைத்துக் கொள்கின்றனர். இது உங்களை மிகப்பெரிய கடன் சிக்கலில் மாட்டிவிடும். கிரெடிட் கார்டு பயன்படுத்துவது ஒரு லோன் வாங்குவது போல தான். அதற்கான பணத்தை நீங்கள் சரியான நேரத்தில் திருப்பி செலுத்த வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
நல்ல கிரெடிட் கார்டு யுட்டிலைசேஷன் விகிதத்தை பராமரிக்கவும்...
ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கு ஒரு லிமிட் உண்டு. அது பல ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை இருக்கலாம். உங்களது மொத்த கிரெடிட் லிமிட்டில் இருந்து நீங்கள் பயன்படுத்தக்கூடிய கிரெடிட் என்பது கிரெடிட் யூட்டிலைசேஷன் விகிதம் அல்லது கிரெடிட் யூட்டிலைசேஷன் லிமிட் எனப்படுகிறது.
உங்களது 100 சதவீத கிரெடிட் கார்டு லிமிட் பயன்படுத்துவதற்கு நீங்கள் அனுமதிக்கப்படுகிறீர்கள் என்றாலும் கூட நல்ல சிபில் ஸ்கோரை பராமரிப்பதற்கு நீங்கள் 30 சதவீத கிரெடிட் லிமிட்டை பயன்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.
ஆஃபர்களுக்காக மட்டுமே கிரெடிட் கார்டுகளை வாங்க வேண்டாம்...
ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷன் அல்லது பிராடக்டிற்கு டிஸ்கவுண்டுகளை பெறுவதற்காக ஒரு சில சமயங்களில் நாம் கிரெடிட் கார்டை வாங்குவது உண்டு. ஆனால் அந்தப் பிராடக்ட்டை வாங்கிய பிறகு மேலும் ஒரு சில தேவையற்ற பொருட்களை வாங்கி நமது பில்களை நாம் அதிகரித்து விடுவோம். எனவே ஆஃபர்களுக்காக கிரெடிட் கார்டு வாங்குவதை தவிர்க்கவும்.
கார்டை திடீரென்று க்ளோஸ் செய்ய வேண்டாம்...
சில நேரங்களில் கிரெடிட் கார்டுகளை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தாமல் இருக்கும் பொழுது, அதனை உடனடியாக நாம் மூடிவிடுவோம். இது உங்களது சிபில் ஸ்கோரை பாதிக்கக்கூடிய ஒரு பழக்கம். எனவே கார்டை மூடுவதற்கு பதிலாக அதனை ரின்யூ செய்யாமல் விடுவது நல்லது.
பணம் வித்ட்ரா செய்வதை தவிர்க்கவும்...
கிரெடிட் கார்டுகள் மூலமாக கேஷ் வித்ட்ராயல்கள் அனுமதிக்கப்படுகிறது என்றாலும் கூட முடிந்த அளவுக்கு அதிலிருந்து பணத்தை வித்ட்ரா செய்யாதீர்கள். ஏனெனில் அது உங்களது சிபில் ஸ்கோரை பாதிக்கும். அதுமட்டுமல்லாமல் கேஷ் வித்ட்ராயல்களுக்கு அதிக வட்டி கணக்கிடப்படுகிறது. ஒரு மாதத்திற்கு 4 சதவீத வட்டி கூட வசூலிக்கப்படுகிறது. மேலும் ATM கார்டு மூலமாக நீங்கள் பணத்தை வித்ட்ரா செய்யும் பொழுது உங்களுக்கு எந்த ஒரு ரிவார்ட் பாயிண்ட்டுகளும் கிடைக்காது.

No comments