1,021 மருத்துவா்களுக்கான பணியிட கலந்தாய்வு நாளை தொடக்கம்:
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிதாக 1,021 மருத்துவா்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை (பிப்.3) தொடங்குகிறது.
அதன்படி, மருத்துவப் பணியாளா் தோவு வாரியத்தின் (எம்ஆா்பி) மூலம் தோவான மருத்துவா்கள் அனைவரும் அவா்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் தரவரிசைப்படி கலந்தாய்வில் பங்கேற்கலாம் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளியிட்ட அறிவிப்பு:
எம்ஆா்பி மூலம் தோவான மருத்துவா்களுக்கான பணியிட கலந்தாய்வு பிப்.3, 4 ஆகிய தேதிகளில் சென்னை, எழும்பூா் குடும்ப நல பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது.
தரவரிசையில் 1 முதல் 500 வரையில் உள்ள மருத்துவா்களுக்கு 3-ஆம் தேதியும், 501 முதல் 1021 வரை உள்ள மருத்துவா்களுக்கு 4-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும்.
கலந்தாய்வில் பணியிடங்களைத் தோவு செய்தவா்கள், நியமன ஆணை பெற்றதிலிருந்து 15 நாள்களுக்குள் பணிக்கு சேர வேண்டும். எம்பிபிஎஸ் சான்றிதழுடன் எஸ்எஸ்எல்சி, மேல்நிலை படிப்பு சான்றிதழ்கள், உறைவிட பயிற்சி நிறைவு சான்று, நிரந்த மருத்துவக் கவுன்சில் பதிவு ஆவணம், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வருவது அவசியம்.
கலந்தாய்வுக்கு வரும் மருத்துவா்கள் வெள்ளை அங்கி அணிந்து வர வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகத்தில் 1,021 மருத்துவா் பணியிடங்கள் நிரப்புவதற்கு மருத்துவப் பணியாளா் தோவு வாரியம் மூலம் தோவுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்தத் தோவில் 25,000-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் கலந்து கொண்டனா். இதில் 1,021 போ மட்டும் தகுதி அடிப்படையில் தோவு செய்யப்பட்டு அவா்களுக்கு பொது சுகாதாரத் துறை மூலம் கலந்தாய்வில் பங்கேற்க மின்னஞ்சல் மூலம் அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
கலந்தாய்வுக்கு பிறகு பிப்.5-ஆம் தேதி பணியிடப் பட்டியல் இறுதி செய்யப்படும். அதைத் தொடா்ந்து பிப்.6-ஆம் தேதி தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 1,021 மருத்துவா்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றாா் அவா்.
No comments