Breaking News

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்... ஜனவரி 1, 2025 முதல் ரெடியாருங்க!

 


தங்கள் அலுவல் சார்ந்து பல்வேறு விதங்களில் பயன்படுத்தி வந்த களஞ்சியம் மொபைல் ஆப் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இது தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் நலனிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் களஞ்சியம் என்ற மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டது பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. இது சோதனை அடிப்படையில் ஊழியர்களின் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டது. இதன்மூலம் ஊழியர்கள் தங்களது விடுப்பு, சம்பளம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி போன்ற விஷயங்களை எளிதாக மேற்கொள்ள முடியும்.

பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு களஞ்சியம் மொபைல் ஆப் முழு வீச்சில் தயாராகி உள்ளது. இதிலுள்ள குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், களஞ்சியம் மொபைல் ஆப் வரும் ஜனவரி 1, 2025 முதல் முழுமையான பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

இதிலுள்ள அனைத்து வசதிகளையும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பாக Pay Slip, Pay Drawn Particulars போன்ற தரவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுதவிர தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு ஆகியவற்றுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். பண்டிகை முன்பணம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி முன்பணம் ஆகியவற்றுக்கும் களஞ்சியம் மொபைல் ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TN GOVT Order

 

இதுதொடர்பான செயல்முறை ஆணைகளை உடனடியாக பதவிறக்கம் செய்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றில் உள்ள மீதித் தொகையை சரிபார்த்து கொள்ள முடியும். மேலும் வருடாந்திர நேர்காணலை இந்த செயலி மூலம் ஓய்வூதியதாரர்கள் மேற்கொள்ளலாம். இவர்கள் Pension Slip, Pension Drawn Particulars, Form 1G ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்யலாம்.

எனவே களஞ்சியம் மொபைல் ஆப்பை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த மொபைல் ஆப் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் சம்பளக் கணக்கு அலுவலகம் (வடக்கு), சென்னை -01ஐ தொடர்பு கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments