School Holiday Latest Announcement: பள்ளி, கல்லூரிகளுக்கு டிச.24 விடுமுறை... சற்று முன் வெளியான அறிவிப்பு...
உலகமெங்கும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிற டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடுத்து குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்திற்குக் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் டிசம்பர் 24 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
No comments