Breaking News

ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. அதிக வட்டி தரும் வங்கிகள் லிஸ்ட்..!!

 


பணத்தை வைத்து கொண்டு பணத்தை பாதுகாக்கவும், முதலீட்டிற்கான வழி தேடுபவர்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் ஒரு வரப்பிரசாதமே. வங்கிகளில் உங்கள் பணத்தை சேமிக்கும்போது, வங்கிகள் அந்த பணத்திற்கு சிறப்பான வட்டியையும் கூட வழங்குகிறது. அதோடு பணத்திற்கு பாதுகாப்பையும் தருகிறது. நாட்டில் உள்ள சாதாரண குடிமக்களுக்கும், ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களுக்கு வங்கிகள் வெவ்வேறு வகையான வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

பெரும்பாலான மூத்த குடிமக்கள் தங்களது ஓய்வுக்கு பிறகு பணத்தை பாதுகாக்க ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்ய தேர்வு செய்கிறார்கள். ஏனெனில் அவை மிகவும் பாதுகாப்பானவை. எந்த ஆபத்தும் இல்லாதவை. பணி ஓய்வுக்குப் பிறகு அவர்களுக்கு வருமான ஆதாரம் இல்லை. எனவே செலவு செய்ய பணமில்லாமல் தவிக்க வேண்டிவரும். அதனால்தான் எதிர்காலத் தேவைகளுக்கு துல்லியமான நிதித் திட்டமிடல் அவசியம். அப்போதுதான் கண்ணியமான வாழ்க்கை முறையை அடைய வாய்ப்பு ஏற்படும்.

சில மூத்த குடிமக்கள் எந்த மாதிரியான முதலீட்டை தேர்வு செய்வது என்று யோசிப்பார்கள். ஃபிக்ஸட் டெபாசிட்தான் இவர்களுக்கு சரியான தேர்வு என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ரிஸ்க் இல்லாமல் வட்டி வடிவில் நிலையான வருமானம் இருப்பதால், வாழ்க்கை முறையை அப்படியே தொடரலாம். பண சிரமங்கள் இருக்காது. பங்குச் சந்தை மற்றும் பிற முதலீடுகளுடன் ஒப்பிடும்போது, ​​ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் ஆபத்து இல்லாதவை. அதனால்தான் மூத்த குடிமக்கள் இவற்றில் அதிக முதலீடு செய்கின்றனர். வங்கிகள் வழங்கும் சேவைகளுக்கு சாதாரண குடிமக்களுடன் ஒப்பிடும்போது அதிக வட்டி விகிதத்தை வழங்குகின்றன. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மூத்த குடிமக்களாக கருதப்படுகின்றனர். இதற்கிடையில், நாட்டின் முன்னணி வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு ஐந்தாண்டு கால ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. 8 சதவீதம் வரை வழங்குகிறது. இப்போது எந்த வங்கியில் அதிக வட்டி விகிதங்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.
நாட்டின் தனியார் வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி, மூத்த குடிமக்களுக்கு ஐந்தாண்டு கால ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு அதிகபட்சமாக 8 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. மறுபுறம், டிசிபி வங்கி மூத்த குடிமக்களுக்கு அதே ஐந்தாண்டு காலத்திற்கு 7.9 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஃபெடரல் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை ஐந்தாண்டு கால அவகாசத்தில் 7.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகின்றன.
 
ஆர்பிஎல் வங்கி 7.6 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை 7.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகின்றன. கரூர் வைஸ்யா வங்கி 7.4 சதவீத வட்டியை வழங்குகிறது. எஃப்டி வட்டிக்கு ஏன் வரி?: வருமான வரிச் சட்டம் 1961ன் படி, ஃபிக்ஸட் டெபாசிட் தொகையில் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும். நிதியாண்டில் மூத்த குடிமக்களுக்கான வட்டி வருமானம் ரூ. 50 ஆயிரத்தை தாண்டினால் எஃப்டியில் டிடிஎஸ் 10 சதவீதமாக இருக்கும். பான் கார்டு விவரம் இல்லை என்றால் 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.



No comments