நாய்கள் இதனால், தான் செருப்புகளை கடித்து வைக்கிறதா.?! இது தெரிஞ்சா இனி அடிக்கவே மாட்டீங்க.!
நன்றியுள்ள ஜீவன்
மனிதர்களுடன் அதிக நன்றியுடனும், நட்புடனும் பழகக்கூடிய விலங்கு நாய். தன்னை வளர்ப்பவர்களுக்காக உயிரைக்கூட கொடுக்கக்கூடிய ஒரு பிறவி தான் நாய். அந்த அளவிற்கு நன்றியுடனும், அன்புடனும் இருக்கக்கூடிய ஜீவன். இவ்வளவு அன்பாக இருக்கும் நாய்களின் ஒரு சில பழக்க வழக்கங்கள் நமக்கு சுத்தமாக பிடிக்காது. அதில், முக்கியமானது வீட்டில் இருக்கும் செருப்புகளை கடித்து குதறி வைப்பது.
செருப்பு கடிக்கும் பழக்கம் ஏன்.?
என்னதான் வீட்டில் செல்லமாக வளர்த்தாலும், நம் பேச்சைக் கேட்காமல் செருப்பை கடித்து வைத்துவிடும். அடித்தாலும், திட்டினாலும் மீண்டும் மீண்டும் அதையேதான் செய்யும். நாய்களுக்கு பயந்து செருப்புகளை ஒளித்து வைக்கும் கொடுமை கூட பல வீடுகளில் நடக்கும். நாய்கள் ஏன் செருப்புகளை கடிக்கிறது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மனிதர்களின் நேசத்திற்கு ஏக்கம்
நாய்கள் யாருடைய செருப்பையும், உடைகளையும் கிழிக்கிறதோ அது அவர்களை அதிகம் நேசிப்பதாக அர்த்தம். அவர்களது நறுமணம் அந்த நாய்களுக்கு பிடிக்கும். அந்த வாசனையை தக்க வைத்துக்கொள்ள இது போன்ற செயல்களில் நாய்கள் ஈடுபடுகின்றன. ஒருவேளை நாய்கள் நமக்கு விருப்பமானவரை பிரிந்தால் அந்த நேரத்தில் அவரது வாசனையை வைத்து அந்த பிரிவை ஈடு கட்டுவதற்காக அவரது செருப்பையோ அல்லது உடைமைகளையோ கடித்து வைக்கிறது.
ஈடு இணையற்ற அன்பு
சில நேரங்களில் கொடும்பசியின் காரணமாக கூட நாய்கள் செருப்புகளை கடிக்கும். நாய்களின் வயிற்றில் குடல் புழுக்கள் இருந்தால் அதனால் கூட நாய் செருப்புகளை கடிக்கும். நாய்க்குட்டிகள் விளையாட்டுத்தனமாக துணிகளை கிழிப்பது, செருப்பை கடிப்பது என்று செய்யும். எனவே, எல்லா நேரமும் அது பாசத்தால் மட்டுமே கடிக்கிறது என்று நினைக்கத் தேவையில்லை. உங்கள் செருப்பை நாய் கடித்தால் உங்கள் மீது அதிக அன்பு இருக்கிறது என்று அர்த்தம். எனவே இனி நாய்கள் செருப்புகளை கடித்தால் அதை பதிலுக்கு திட்டாமல் அடிக்காமல் பாசத்தை கொடுங்கள். உலகில் வேறு எந்த ஜீவ ராசியும் இந்த அளவிற்கு பாசத்தை மனிதர்களுக்கு கொடுக்காது என்பதை மறந்து விடாதீர்கள்.
No comments